ஆசிரியர் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் மருத்துவர் கைது

ஆசிரியர் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் மருத்துவர் கைது
Updated on
1 min read

பாட்னா: பிஹாரில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசுப் பணிகள் தேர்வாணையம் (பிபிஎஸ்சி) போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த 2024 மார்ச் 15-ம் தேதி நடைபெறவிருந்த டிஆர்இ-3 தேர்வுக்கு முன் வினாத்தாள் கசிந்தது தொடர்பான வழக்கை பாட்னா பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் ஜஹானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த மனீஷ்குமார் என்ற மருத்துவரிடம் போலீஸார் கடந்த திங்கட்கிழமை விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 296 ஆக அதிகரித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் மருத்துவர் கைது
தேவ் ஆனந்தின் மகனும் நடிகருமான சுனில் ஆனந்த் காலமானார் - திரையுலகினர் இரங்கல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in