திருமண நிலையை மாற்ற மத அமைப்புகளுக்கு உரிமை கிடையாது: சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஷரீயா நீதிமன்றங்களின் விவாகரத்து உத்தரவு சட்டப்படி செல்லாது
திருமண நிலையை மாற்ற மத அமைப்புகளுக்கு உரிமை கிடையாது: சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: ஷரீயா நீதிமன்றங்களின் விவாகரத்து உத்தரவு சட்டப்படி செல்லாது என்றும் திருமண நிலையை மாற்ற தனி​யார் மற்​றும் மத அமைப்​பு​களுக்கு உரிமை கிடை​யாது என்றும் சத்தீஸ்கர் உயர் நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

சத்​தீஸ்​கர் மாநிலம், ராய்​பூரில் திக்​க​ரா​பாரா பகு​தி​யைச் சேர்ந்த நிரோஷ் அப்​பாஸி எனும் முஸ்​லிம் பெண்​ணின் கணவர் கடந்த 2015-ல் இறந்து விட்​டார். இதையடுத்​து, ஜுலை 18, 2020-ல் முகம்​மது ஆபீத் கானை மறுமணம் செய்​தார். நிரோஷின் முதல் திருமணத்​தில் பிறந்த குழந்​தைகளை ஏற்​ப​தில் இரு​வருக்​கும் கருத்து வேறு​பாடு எழுந்​துள்​ளது.

இதனால், மோதல் முற்​றியதையடுத்து நிரோஷ், தன் மாமி​யார் வீட்​டா​ரால் கொடுமைக்கு ஆளா​னார். இதையடுத்​து, நிரோஷ், 2021 அக்​.7-ல் ராய்​பூர் மாவட்ட எஸ்​எஸ்​பி​யிடம் புகார் செய்​தார். இப்​பு​காரை ஏற்று கணவர் ஆபீத் கான் மற்​றும் அவரது வீட்​டார் மீது வழக்​குப் பதி​வானது. இதனிடையே, ஆபீத் கான் முஸ்லிம்களின் ஷரீ​யத் முறைப்​படி நிரோஷை முத்​தலாக் கூறி விவாகரத்து செய்து விட்​ட​தாகக் கூறி​யுள்​ளார். ராய்​பூரின் பிரபல இதார் எ ஷரீயா எனும் இஸ்​லாமிய அமைப்​பிடம் இந்த விவ​காரம் சென்​றது. இதில், ஆபீத் கான் அளித்த விவாகரத்து முறை​யானதே என தீர்ப்பு வழங்​கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்​து, ராய்​பூர் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடுத்​தார் நிரோஷ். இவ்​வழக்கை விசா​ரித்த நீதிபதி அம்தேந்திரா கிஷோர் பிர​சாத் தீர்ப்பளித்தார். இதே​போன்ற ஒரு வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்பை சுட்​டிக்​காட்​டிய நீதிப​தி, தனி​யார் மற்​றும் மத அமைப்​பு​கள் சட்​டப்​படி​யான எந்த ஒரு திரு​மணத்​தின் நிலை​யின் உரிமை​யை​யும் மாற்ற முடி​யாது என உத்​தர​விட்​டுள்​ளார்.

மேலும்,‘‘ஷரீயா நீதிமன்றங் களின் விவாகரத்து உத்தரவு சட்டப்படி செல்லாது. சுய​மாக இயங்​கும் ஷரீயா உள்​ளிட்ட எந்​த வொரு தனி​யார் மத அமைப்​பு​க்கும் சட்​டப்​பூர்வ அதி​காரம் இல்லை. மதம் என்​பது தனிப்​பட்ட நம்​பிக்​கைக்​குரிய விஷய​மாக இருந்​தா​லும், சட்​டப்​பூர்​வ​மாக நிறு​வப்​பட்ட நீதி​மன்​றத்​தின் அதி​காரங்​களைக் கைப்​பற்ற எந்​தவொரு முறை​சாரா மத அமைப்பையும் அனு​ம​திக்க முடி​யாது. நாட்​டின் அரசியலமைப்பில் எந்​தவொரு மாற்று நீதி அமைப்​புக்​கும் இடமில்​லை’’ என குறிப்பிட்டுள்​ளார்.

எனினும், முஸ்​லிம்​களின் விவாகரத்து முறை​யில் முக்​கிய​மான ‘தலாக்​-ஏ-ஹசன்' மீதான அரசி​யலமைப்​புச் செல்​லுபடித் தன்மை குறித்த முக்​கிய விவ​காரம் ஏற்​கெனவே உச்ச நீதி​மன்​றத்​தின் பரிசீலனை​யில் உள்​ளது. எனவே, அது குறித்து இந்த வழக்​கின் தீர்ப்​பில் எந்​த​விதக் குறிப்​பு​களும் அளிக்க நீதி​மன்​றம் முற்படவில்லை. வரலாற்று சிறப்பு மிக்​க​தாகக் கருதப்​படும் இந்தத் தீர்ப்​பி​னால், குடும்​பம் மற்​றும் திருமண விவ​காரங்​களில் முறை​சாரா பஞ்​சா​யத்​துகள் அல்​லது மத அமைப்​பு​கள்​ தலை​யிட சட்​டப்​படி உரிமை இல்​லை என்​பது தெளி​வாகி உள்​ளது.

திருமண நிலையை மாற்ற மத அமைப்புகளுக்கு உரிமை கிடையாது: சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு
ரூ.1,200 கோடியில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலக வளாகம்: தமிழக அரசின் அரசாணை வெளியீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in