காஷ்மீரில் இல்லாத ஓட்டலுக்கு முன்பதிவு செய்து ஏமாற்றம்: கடுங்குளிரில் காரிலேயே தங்கிய குடும்பம்

தனியார் நிறுவனம் ரூ.48 ஆயிரம் வழங்க உத்தரவு
காஷ்மீரில் இல்லாத ஓட்டலுக்கு முன்பதிவு செய்து ஏமாற்றம்: கடுங்குளிரில் காரிலேயே தங்கிய குடும்பம்
Updated on: 
1 min read

புதுடெல்லி: பஞ்​சாப் மாநிலம் குர்​தாஸ்​பூரைச் சேர்ந்​தவர் வழக்கறிஞர் ராஜேஷ் சோஹன். இவர் கடந்த ஆண்டு டிசம்​பரில் தனது குடும்​பத்​தா​ருடன் ஸ்ரீநகரில் குல்​மார்க் உள்​ளிட்ட இடங்களுக்கு சுற்​றுலா செல்​வதற்​காக மேக்மை டிரிப் இந்​தியா நிறு​வனத்​தின் இணை​யதளம் வழி​யாக ஸ்ரீநகரில் ஹெரிடேஜ் ரோஸ் இன், குல்​மார்க்​கில் ஆப்​பிள் ட்ரீ ரெசார்ட்ஸ் ஆகிய 2 ஓட்டல்களில் அறையை முன்​ப​திவு செய்​தார்.

திட்​ட​மிட்​டபடி ஸ்ரீநகரிலுள்ள அந்த ஓட்​டலுக்கு ராஜேஷ் குடும்பத்தார் சென்​ற​போது அந்த பெயரில் ஓட்​டலே இல்லை என்பது தெரிய​வந்​தது. இதைத் தொடர்ந்து குல்​மார்க்​கிலுள்ள ஆப்பிள் ட்ரீ ரெசார்ட்​ஸுக்கு சென்​ற​போது அந்த பெயரில் ஒரு ஓட்டலே அங்கு இல்லை என்று தெரிய​வந்​தது. இல்​லாத 2 ஓட்டல்களுக்​காக பணம் கொடுத்து ராஜேஷ் ஏமாந்​தார். இதனால் அவர்​கள் கடுங்​குளிரில் காரிலேயே தங்க வேண்​டிய நிலை ஏற்பட்டது.

இதுதொடர்​பாக குர்​தாஸ்​பூரிலுள்ள மாவட்ட நுகர்​வோர் குறைதீர் ஆணை​யத்​தில் ராஜேஷ் வழக்கு தொடர்ந்​தார். வழக்கை விசாரித்த ஆணைய தலை​வர் லலித் மோகன் டோக்​ரா, உறுப்பினர் பகவான் சிங் மதாரு ஆகியோர் மேக் மைப் டிரிப் இந்தியா நிறு​வனம் ரூ.48,775-ஐ ராஜேஷ் குடும்​பத்​தா​ருக்கு வழங்க உத்​தர​விட்​டனர்.

ஓட்​டல் அறையை முன்​ப​திவு செய்​ததற்​கான பணம் ரூ.18,775, குடும்​பத்​தா​ருக்கு ஏற்​பட்ட மனஉளைச்​சல், நிதி இழப்பு ஆகியவற்றுக்​காக ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு, ரூ.5 ஆயிரம் வழக்கு செலவு என மொத்​தம் ரூ.48,775-ஐ ராஜேஷ் சோஹன் குடும்பத்துக்கு மேக் மை டிரிப் வழங்க வேண்​டும் என குறைதீர் ஆணைய உத்​தர​வில்​ குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

காஷ்மீரில் இல்லாத ஓட்டலுக்கு முன்பதிவு செய்து ஏமாற்றம்: கடுங்குளிரில் காரிலேயே தங்கிய குடும்பம்
ஜெம் வீரமணி வழக்கை மூடி மறைத்தது திமுக: முதல்வர் விஜய் பேச்சு @ மதுராந்தகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in