பிரிக்ஸ் மாநாடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு: பாஜக விமர்சனம்

பிரிக்ஸ் மாநாடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு: பாஜக விமர்சனம்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்​லி​யில் பிரிக்ஸ் மாநாடு நடை​பெறு​வது தொடர்பாக காங்கிரஸ் தலை​வர்​களிடையே கருத்து வேறு​பாடு ஏற்​பட்​டுள்​ளது. பிரிக்ஸ் மாநாடு செப்​டம்​பர் 12-ம் தேதி (இன்​று) முதல் டெல்​லி​யில் நடை​பெறவுள்​ளது.

இந்த மாநாட்​டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஈரான் அதிபர் பெசஸ்​கி​யான், தென் ஆப்​பிரிக்​கா, பிரேசில் ஆகிய உறுப்பு நாட்டு தலை​வர்​கள் பங்​கேற்​க​வுள்​ளனர். இந்த மாநாட்​டுக்​காக டெல்​லி​யில் பிர​மாண்ட ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்ள நிலை​யில் இந்த மாநாடு தொடர்​பாகக் காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலைவர்களிடையே மாறு​பட்ட கருத்​துகள் எழுந்​துள்​ளன.

இதுகுறித்து கட்​சி​யின் மூத்த தலை​வர் ப.சிதம்​பரம் கூறும்​போது, “கடந்த இரண்டு அல்​லது மூன்று பிரிக்ஸ் மாநாடு​களால் நாட்டுக்கு எந்​தவொரு தெளி​வான அல்​லது குறிப்​பிடத்​தக்க பலன்களும் கிடைக்​க​வில்​லை” என்​றார்.

இதனிடையே கட்​சி​யின் மூத்த தலை​வர்​களில் ஒரு​வ​ரான சசிதரூர் கூறும்​போது, “பிரிக்ஸ் மாநாடு இந்​தி​யா​வில் நடப்​பது முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாகும். பிரிக்ஸ் அமைப்​பில் உள்ள 11 உறுப்பு நாடு​கள் உலக மக்​கள் தொகை​யில் பெரும் பகு​தி​யை​யும், உலகளா​விய ஜிடிபி-​யில் சுமார் 41 சதவீதத்​தை​யும் பிரதிநிதித்துவப் படுத்​துகின்​றன.

எனவே பிரிக்ஸ் அமைப்​பு, வளரும் நாடு​களுக்கு மிக முக்​கிய​மான ஒரு சர்​வ​தேச தளமாகும். பல நாட்​டுத் தலை​வர்​கள் டெல்​லிக்கு வருகை தரு​வது இந்​தி​யா​வின் வெளி​யுறவு மற்​றும் தூதரக பலத்தைக் காட்​டு​கிறது. இம்​மா​நாட்டை இந்​தியா நடத்​து​வது நாட்டுக்குப் பெரு​மை” என்​றார்.

இந்​நிலை​யில் பிரிக்ஸ் மாநாடு குறித்து காங்​கிரஸ் தலை​வர்​களுக்​குள் உள்ள கருத்து வேறு​பாடு குறித்து பாஜக செய்​தித் தொடர்​பாளர் பிரதீப் பண்​டாரி விமர்​சனம் செய்​துள்​ளார்.

அவர் கூறும்​போது, “காங்​கிரஸ் கட்சி நாட்​டின் சர்​வ​தேச வளர்ச்சி மற்​றும் முன்​னேற்​றத்​தைக் கண்டு எப்​போதும் எதிர்​மறை​யான மனநிலை​யையே வெளிப்​படுத்​துகிறது. காங்​கிரஸ் கட்சிக்காரர்களே தங்​களது கட்​சியை அம்​பலப்​படுத்​திக் கொள்கின்​றனர். மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி​யின் அறி​வுறுத்​தலின் பேரில் பிரிக்​ஸ் அமைப்பு மா​நாட்டை அவர்​கள்​ எதிர்க்​கின்​றனர்​” என்​றார்.​

பிரிக்ஸ் மாநாடு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு: பாஜக விமர்சனம்
பிரிக்ஸ் உச்சி மாநாடு கவனத்தை ஈர்த்த ‘நமஸ்தே தாமரை’ சின்னம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in