கல்யாண வெங்கடேஸ்வரருக்கு தங்க யானை, சிம்ம வாகனங்கள் நன்கொடை வழங்கிய பக்தர்கள்

கல்யாண வெங்கடேஸ்வரருக்கு தங்க யானை, சிம்ம வாகனங்கள் நன்கொடை வழங்கிய பக்தர்கள்
Updated on: 
1 min read

திருப்பதி: திருப்பதி தேவஸ்​தானத்​தின் கட்​டுப்​பாட்​டில் உள்ள ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலுக்கு ஹைத​ரா​பாத்​தைச் சேர்ந்த பக்​தர்​கள் தங்க முலாம் பூசப்​பட்ட புதிய யானை மற்​றும் சிம்ம வாக​னங்​களை நேற்று நன்​கொடை​யாக வழங்​கினர்.

திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான பராமரிப்​பில் உள்ள ஸ்ரீநி​வாச மங்​காபுரம் கல்​யாண வெங்​கடேஸ்​வரர் கோயில் மிக​வும் பிரசித்தமானது. இந்​நிலை​யில், ஹைத​ரா​பாத்​தைச் சேர்ந்த லட்சுமி ரெட்டி மற்​றும் திவ்யா பிரி​யங்கா ஆகிய பக்​தர்​கள், ரூ.40 லட்​சத்​தில் தயாரிக்​கப்​பட்ட தங்க முலாம் பூசிய யானை மற்​றும் சிம்ம வாக​னங்​களை கல்​யாண வெங்​கடேஸ்​வரர் கோயி​லின் துணை நிர்​வாக அதி​காரி வரலட்​சுமி​யிடம் நேற்று ஒப்படைத்தனர்.

இந்த வாக​னங்​களுக்கு நேற்று சிறப்பு பூஜைகள் நடத்​தப்​பட்​டன. இவை இக்​கோயி​லில் நடை​பெறவுள்ள பிரம்​மோற்சவ விழா​வில் உபயோகப்​படுத்​தப்​படும் என தேவஸ்​தான அதி​காரி​கள் தெரிவித்துள்​ளனர். இந்​நிகழ்ச்​சி​யில் உதவி நிர்​வாக அதி​காரி கோபி​நாத், கண்​காணிப்​பாளர் ராஜ்கு​மார், அர்ச்​சகர்​கள் மற்​றும் அதி​காரி​கள்​ பங்​கேற்​றனர்​.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in