“உங்களிடம் ஓட்டு, என்னிடம் நிதி” - அஜித் பவார் பேசியது என்ன?

“உங்களிடம் ஓட்டு, என்னிடம் நிதி” - அஜித் பவார் பேசியது என்ன?

Published on

மும்பை: உங்​களிடம் ஓட்​டு, என்​னிடம் பணம் என மகா​ராஷ்டிரா துணை முதல்​வர் அஜித் பவார் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மகா​ராஷ்டி​ரா​வில் உள்​ளாட்சி தேர்​தல் நடை​பெறவுள்​ளது. இதன் பிரச்​சா​ரத்​துக்​காக துணை முதல்​வரும், நிதி​யமைச்​சரு​மான அஜித் பவார் பாராமதி பகு​தி​யில் மாலே​கான் நகருக்கு சென்​றார். அப்​போது மக்​களிடம் பேசிய அவர், ‘‘தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த 18 வேட்​பாளர்​களை​யும் நீங்​கள் தேர்வு செய்​தால், உங்​கள் தொகு​தி​யின் வளர்ச்​சிக்கு தேவை​யான நிதி​யில் குறைவு ஏற்​ப​டா​மல் நான் பார்த்​துக் கொள்​வேன்.

நான் கூறிய வாக்​குறு​தி​களை எல்​லாம் நிறைவேற்​று​வேன். நீங்​கள் எங்​கள் வேட்​பாளர்​களை தோற்​கடித்​தால், நான் நிதியை குறைப்​பேன். உங்​களிடம் ஓட்​டளிக்​கும் அதி​காரம் உள்​ளது. என்​னிடம் நிதி வழங்​கும் அதி​காரம் உள்​ளது. என்ன செய்ய வேண்​டும் என நீங்​கள் தீர்​மானித்​துக் கொள்​ளுங்​கள்’’ என்றார்.

இவரது பேச்சை எதிர்க்​கட்​சிகள் கடுமை​யாக விமர்​சித்​துள்​ளன. மக்​களை அச்​சுறுத்​தும் வகை​யில் அஜித் பவார் பேசி​யுள்​ளார் என குற்​றம் சாட்​டப்​பட்​டது. குறிப்பாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார்) எம்.பி. சுப்ரியா சுலே, ஓட்டுக்கு பணம் கொடுப்பேன் என வெளிப்படையாக கூறுவதா என கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அஜித் பவார் கூறிய​தாவது: நான் என்ன சொல்ல வேண்​டுமோ அதை​த்தான் கூறினேன். நீங்​கள் என்ன பேச வேண்​டும் என்​பதை நீங்​கள்​தான் பேச வேண்​டும். அது உங்​கள் உரிமை. நான் உண்​மையை கூறினேன். விமர்​சனத்​துக்கு எல்​லாம் நான் முக்​கி​யத்​து​வம் அளிக்க மாட்​டேன். செய்ய வேண்​டிய பணி​களுக்​குத்​தான் முக்​கி​யத்​து​வம் அளிப்​பேன்.

நாங்​கள் வளர்ச்​சியை விரும்​பு​கிறோம். மக்​களின் பிரச்​சினையை தீர்க்க விரும்​பு​கிறோம். மக்​களின் அடிப்​படை தேவை​களை நிறைவேற்ற மத்​திய, மாநில அரசுகள் அளிக்​கும் நிதியை பயன்​படுத்த விரும்​பு​கிறோம். உங்​களிடம் வாக்​களிக்​கும் அதி​காரம் உள்​ளது, என்​னிடம் நிதி அளிக்​கும் அதி​காரம் உள்​ளது என நான் கூறியது எந்த வகை​யில் அச்​சுறுத்​தல்​? இவ்​வாறு அஜித்​ பவார்​ கூறி​னார்​.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in