

புதுடெல்லி: கடந்த சில வாரங்களாக டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. பனிமூட்டம் தொடர்பாக டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்துக்கு நேற்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த சூழலில் வடஇந்தியா முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக 128 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. 8 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.