“அரசியலமைப்பின் வரம்புக்குள் ஜனநாயகம் செயல்பட வேண்டும்” - முரளி மனோகர் ஜோஷி

“அரசியலமைப்பின் வரம்புக்குள் ஜனநாயகம் செயல்பட வேண்டும்” - முரளி மனோகர் ஜோஷி
Updated on: 
1 min read

புதுடெல்லி: தேர்தல்கள் நியாயமாகவும், அரசாங்கங்கள் பொறுப்புடனும், நிர்வாகம் வெளிப்படையாகவும், எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாகவும் செயல்படும்போது மட்டுமே ஜனநாயகம் நிலைத்திருக்கும் என தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, அரசியலமைப்பின் வரம்புக்குள் ஜனநாயகம் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள், இதற்கு பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டம், ஆளும் பாஜகவுக்கு அரசியல் நெருக்கடியை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, “நான் ஒன்றை மட்டுமே சொல்வேன். மக்களால், மக்களுக்காக, மக்களின் அரசாங்கம் பூமியில் இருந்து அழியாது. அமெரிக்க முன்னாள் அதிபர் அபிரகாம் லிங்கன் இதை 200 ஆண்டுகளுக்கு முன்பு கூறினார்.

தேர்தல்கள் நியாயமாகவும், அரசாங்கங்கள் பொறுப்புடனும், நிர்வாகம் வெளிப்படையாகவும், எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாகவும் செயல்படும்பட்சத்தில், மக்களால், மக்களுக்காக, மக்களின் அரசாங்கம் அழியாது என்பதை இன்று நானும் கூறுகிறேன்.

அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்பின் வரம்புக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசியலமைப்பு மீறப்பட்டால் உச்ச நீதிமன்றம் அதில் தலையிட வேண்டும். இந்த அடிப்படையில்தான் ஜனநாயகம் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

“அரசியலமைப்பின் வரம்புக்குள் ஜனநாயகம் செயல்பட வேண்டும்” - முரளி மனோகர் ஜோஷி
ஞானேஷ் குமாருக்கு எதிராக காந்தி நினைவிடத்தில் போராட்டம்: ராகுல் காந்தி அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in