நேஷனல் ஹெரால்டு வழக்கில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு டெல்லி போலீஸ் சம்மன்

நேஷனல் ஹெரால்டு வழக்கில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு டெல்லி போலீஸ் சம்மன்
Updated on
1 min read

புதுடெல்லி / பெங்களூரு: நேஷனல் ஹெரால்டு வழக்​கில் விசா​ரணைக்கு ஆஜராகு​மாறு கர்​நாடக துணை முதல்​வர் டி.கே.சிவகு​மாருக்கு டெல்லி பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸார் சம்​மன் அனுப்​பி​யுள்​ளனர்.

காங்​கிரஸ் ஆதரவு பத்​திரி​கை​யான நேஷனல் ஹெரால்டு நிறு​வனத்​தின் சொத்​துக்​கள் காங்​கிரஸ் கட்​சி​யின் யங் இண்​டியன் அறக்​கட்​டளைக்கு மாற்​றப்​பட்​ட​தில் நிதி மோசடி நடந்​த​தாக புகார் எழுந்​தது. இதுகுறித்து டெல்லி பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸாரும், அமலாக்​கத் துறை அதி​காரி​களும் கடந்த 2022-ம் ஆண்டு வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

காங்​கிரஸ் மூத்த‌ தலை​வர் சோனியா காந்​தி, மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்​தி, கர்​நாடக துணை முதல்​வர் டி.கே.சிவகு​மார் உள்​ளிட்​டோரிடம் விசா​ரணை நடத்​தினர். இந்​நிலை​யில் யங் இண்​டியன் அறக்​கட்​டளைக்கு நன்​கொடை வழங்​கியது தொடர்​பான விசா​ரணைக்​கு, வரும் டிசம்​பர் 19-ம் தேதி ஆஜராகு​மாறு டி.கே.சிவகு​மார், அவரது சகோ​தரர் டி.கே.சுரேஷ் ஆகியோ​ருக்கு டெல்லி பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸார் சம்​மன் அனுப்​பி​யுள்​ளனர்.

அப்​போது யங் இண்​டியன் அறக்​கட்​டளைக்கு எவ்​வளவு பணப் பரி​மாற்​றம் செய்​யப்​பட்​டது? அதற்​கான ஆதா​ரம் மற்​றும் வரு​மான வரிக் கணக்கு விவரங்​களை சமர்ப்​பிக்க வேண்​டும். காங்​கிரஸ் கட்​சிக்கு வழங்​கப்​பட்ட நன்​கொடை தொடர்​பான ஆவணங்​களை​யும் சமர்ப்​பிக்க வேண்​டும் என அதில் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து டி.கே.சிவகு​மார் நேற்று பெங்​களூரு​வில் கூறிய​தாவது: நானும் எனது சகோதரரும் ராகுல் காந்​திக்கு நெருக்​க​மாக இருக்​கிறோம் என்​ப​தால் அமலாக்​கத்​துறை எங்​களை குறி வைக்​கிறது. வெவ்​வேறு வழிகளில் எங்​களுக்கு எதி​ராக சதி திட்​டங்​களை தீட்டி வரு​கிறது. எப்​போது விசா​ரணைக்கு அழைத்​தா​லும் ஆஜா​ராகி விளக்​கம் அளிப்​பேன். இவ்​வழக்கை சட்​டப்​படி எதிர்​கொள்ள தயா​ராக இருக்​கிறேன்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு டெல்லி போலீஸ் சம்மன்
திரிணமூல் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முர்ஷிதாபாத்தில் பாபர் மசூதி கட்ட அடிக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in