

புதுடெல்லி: தெரு நாய்கள் பிரச்சினை தொடர்பாக ஒருங்கிணைந்து செயல்பட பள்ளிகளில் சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என டெல்லி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது.
இது தொடர்பாக சமூக ஊடகத்தில் கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சி நிறுவனர் கேஜ்ரிவால், “மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு பதிலாக டெல்லி ஆசிரியர்கள் தெரு நாய்களை கணக்கெடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” என பதிவிட்டிருந்தார்.
சமூக ஊடகத்தில் தவறான தகவல் பரப்புவது தொடர்பாக கேஜ்ரிவால் மீது போலீஸில் கல்வித்துறை புகார் அளித்தது. இதை யடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.