

புதுடெல்லி: காப்புரிமை விவகாரத்தில் சரிகம நிறுவனத்தின் பாடல்களைப் பயன்படுத்த இளையராஜாவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை டெல்லி உயர் நீதிமன்றம் நீக்க மறுத்துவிட்டது.
இதுதொடர்பாக சரிகம நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ‘‘அன்னக்கிளி, 16 வயதினிலே, கவிக்குயில், முள்ளும் மலரும், ராஜபார்வை, நெற்றிக்கண், கல்யாணராமன் உள்ளிட்ட 134 திரைப்பட பாடல்களுக்கான காப்புரிமை தங்களிடம் இருக்கும்போது அதை இளையராஜா பயன்படுத்துவது, காப்புரிமையை மீறிய செயல்’’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கெடில்லா, சரிகம நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட திரைப்படப் பாடல்களை பயன்படுத்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கடந்த பிப்ரவரி 16-ம் தேதி இடைக்கால தடை விதித்தார்.
இதையடுத்து இடைக்கால தடையை நீக்கக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கெடில்லா இடைக்கால தடையை நீக்க மறுத்துவிட்டார்.