டிச.30, 31 மற்றும் ஜன.1-ம் தேதிகளில் டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே திருப்பதியில் தரிசனம்

டிச.30, 31 மற்றும் ஜன.1-ம் தேதிகளில் டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே திருப்பதியில் தரிசனம்
Updated on
1 min read

திருப்பதி: வை​குண்ட ஏகாதசியை முன்​னிட்​டு, திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் சொர்க்க வாசல் தரிசனத்​துக்கு இம்​மாதம் 30, 31 மற்​றும் ஜன. 1-ம் தேதி​களில் தரிசன டிக்​கெட்​டு​கள் இருக்​கும் பக்​தர்​களுக்கு மட்​டுமே சுவாமி தரிசனம் செய்ய வாய்ப்பு வழங்​கப்​படும் என தேவஸ்​தான நிர்​வாக அதி​காரி அனில்​கு​மார் சிங்​கால் தெரி​வித்​தார்.

இதுதொடர்​பாக திருப்​ப​தி​யில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறிய​தாவது: வரும் 30-ம் தேதி வைகுண்ட ஏகாதசி​யும், மறு​நாள் 31-ம் தேதி துவாதசி​யும், ஜன.1-ம் தேதி ஆங்​கில புத்​தாண்​டும் பிறக்க உள் ளது. வைகுண்ட ஏகாதசியை முன்​னிட்டு கடந்த மாதமே ஆன்லைன் மூலம் குலுக்​கல் முறை​யில் ரூ.300 சிறப்பு தரிசனடிக்​கெட்​டு​களும், ​வாணி அறக்​கட்​டளைக்​கான டிக்கெட்​டு​களும் வழங்​கப்​பட்டு விட்​டன.

இந்த 3 நாட்​களில் விஐபி பிரேக் தரிசனம், மாற்று திற​னாளி பக்​தர்​களுக்​கான தரிசனம், முதி​யோ​ருக்​கான தரிசனம் உட்பட அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்​யப்​பட்டு விட்​டன.கடந்த கால அனுபவங்​களை நினை​வில் கொண்​டு, வைகுண்டஏகாதசிக்கு வரும் பக்​தர் களுக்கு திருப்​ப​தி​யில் டிக்​கெட்​டு​களை வழங்​கி​னால், தள்​ளு​முள்ளு ஏற்​பட்டு விபரீதங்​கள் நடக்​க​வும் வாய்ப்​பு​கள் உள்​ள​தால் இம் முறை ஆன்​லைனில் குலுக்​கல் முறை​யில் டிக்​கெட்​டு​கள் வழங்​கப்​பட்டுவிட்​டன.

சாமானிய பக்​தர்​களுக்கு முன்​னுரிமை வழங்​கும் வித​மாக மேற்​கண்ட 10 நாட்​களில் 182 மணிநேரத்​தில் 164 மணி நேரம் சாமானிய பக்​தர்​களுக்​காக ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இ-டிப் மூலம் முன்​ப​திவு செய்த பக்​தர்​கள் அதில்குறிப்​பிட்​டுள்ள நேரத்​தில் திரு​மலைக்கு வர வேண்​டும். 27 மாநிலங்​களில் இருந்து சொர்க்க வாசல் தரிசனத்துக்கு 23.64 லட்​சம் பக்​தர்​கள் இது​வரை முன்​ப​திவு செய்​தனர். 1.89 லட்​சம் சாமானிய பக்​தர்​கள் குலுக்​கல் முறை​யில் ப​திவு செய்​தனர்.

ஆதலால், எவ்​வித தரிசன முன்​ப​திவு டிக்​கெட்​டு​கள் இல்​லாத பக்​தர்​கள் வரும் டிச. 30, 31, ஜன. 1-ம் தேதி திரு​மலைக்கு வரும் நோக்​கத்தை தள்ளி வைத்து கொள்​ளுதல் நல்​லது. ஜன.2 முதல் 8-ம் தேதி வரை எவ்​வித தரிசன டிக்​கெட்டு​கள் இல்​லா​விடினும் தர்ம தரிசனம் வாயி​லாகச் சென்று சுவாமியை சொர்க்க வாசலில் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்துவிடலாம். வைகுண்ட ஏகாதசி, துவாதசி, ஆங்​கில புத்​தாண்டுக்கு தரிசன டிக்​கெட்​டு​கள் இல்​லாத பக்​தர்​கள் திரு​மலைக்கு வந்து ஏமாற வேண்​டாம்​. இவ்​வாறு அவர்​ கேட்டுக் கொண்டுள்ளார்.

டிச.30, 31 மற்றும் ஜன.1-ம் தேதிகளில் டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே திருப்பதியில் தரிசனம்
“கோவையில் 10 தொகுதிகளிலும் திமுக நிச்சயம் வெற்றிபெறும்” - செந்தில்பாலாஜி உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in