யுபிஎஸ்சி-க்கு பட்டியல் அனுப்பாமல் பொறுப்பு டிஜிபி நியமிக்கும் கலாச்சாரம்: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

யுபிஎஸ்சி-க்கு பட்டியல் அனுப்பாமல் பொறுப்பு டிஜிபி நியமிக்கும் கலாச்சாரம்: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

Published on

புதுடெல்லி: புதிய டிஜிபிக்கான பெயர் பட்​டியலை உரிய காலத்துக்​குள் யுபிஎஸ்​சிக்கு அனுப்​பாமல், பொறுப்பு டிஜிபி நியமிக்​கும் கலாச்​சா​ரம் குறித்து மாநிலங்​களுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்​பி​யுள்​ளது.

தெலங்​கானா டிஜிபி தேர்வு முறையை 4 வாரங்​களுக்​குள் நிறைவு செய்ய அம்​மாநில உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை எதிர்த்து யுபிஎஸ்சி உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தது. இம்​னுவை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​ காந்த், நீதிபதி ஜோய்​மால்யா பக்சி அடங்​கிய அமர்வு நேற்று விசா​ரித்​தது.

யுபிஎஸ்சி சார்​பில் மூத்த வழக்​கறிஞர் நரேஷ் கவுசிக் ஆஜராகி, “அடுத்த டிஜிபிக்​கான பரிந்​துரை பட்​டியலை மாநிலங்​கள் அனுப்​புவ​தில் ஏற்​படும் தாமதத்​தால் தகு​தி ​வாய்ந்த, மூத்த ஐபிஎஸ் அதி​காரி​கள் பாதிக்​கப் ​படு​கின்​றனர். பிர​காஷ் சிங் வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை பல மாநிலங்​கள் மதிப்பதில்லை. நிரந்தர டிஜிபி-க்கு பதிலாக பொறுப்பு டிஜிபி நியமிப்​பதை விரும்​பு​கின்​றன. தெலங்​கானா டிஜிபி நியமனத்திலும் இது பொருந்​து​வ​தாக உள்​ளது. நிரந்தர டிஜிபி கடந்த 2015ல் நியமிக்​கப்​பட்டு 2017ல் ஓய்​வு ​பெற்​றார். அதன் பிறகு பொறுப்பு டிஜிபி தொடர்​கிறார்” என்று வாதிட்​டார்.

இதற்கு நீதிப​தி​கள், “உச்ச நீதி​மன்ற தீர்ப்பை பின்​பற்​றாத மாநிலங்​களுக்கு எதி​ராக யுபிஎஸ்சி ஏன் நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தாக்​கல் செய்​ய​வில்​லை” என கேள்வி எழுப்​பினர். மேலும், "தங்​களுக்கு வேண்​டப்​படும் நபரை பொறுப்பு டிஜிபி​யாக அல்​லது தற்​காலிக டிஜிபி​யாக மாநிலங்​கள் நியமித்து வரு​கின்​றன. நிரந்தர டிஜிபியை நியமிக்க விரும்​பாத மாநிலங்​களின் வலையில் சிக்க வேண்​டாம்.

பிர​காஷ் சிங் வழக்​கின் தீர்ப்பை தெலங்​கானா மட்​டும் அல்ல, ஏனைய மாநிலங்​களும் மதிக்​காமல் பொறுப்பு டிஜிபிக்​களை நியமித்​துள்​ளன” என்​றும் தெரி​வித்து, தெலங்​கானா உயர் நீதிமன்ற உத்​தரவை செயல்​படுத்த யுபிஎஸ்​சி-க்கு கூடு​தலாக 4 வாரம் அவகாசம் வழங்​கினர்.

நீதிப​தி​கள் தங்​கள் உத்​தர​வில், “அடுத்த டிஜிபிக்​கான பெயர்​களை தெலங்​கானா அரசு உரிய நேரத்​தில் பரிந்​துரைக்​க​வில்லை என்ற யுபிஎஸ்​சி​யின் ஆட்​சேபனையை பதிவு செய்து கொள்​கிறோம். இருப்​பினும் யுபிஎஸ்​சி​யின் இந்த ஆட்​சேபனை, சூழலை மேலும் மோச​மாக்​கி, நிரந்தர டிஜிபிக்​களை நியமிக்​காமல் இருக்க உதவிடும். அது பிர​காஷ் சிங் வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் வழங்கிய தீர்ப்​புக்கு எதி​ராக மாறி​விடும் என்​ப​தால், தெலங்​கானா டிஜிபியை தேர்வு செய்​யும் குழு கூட்​டத்தை விரை​வாக நடத்தி அதற்​கான பரிந்​துரையை விரை​வில் மாநில அரசுக்கு யுபிஎஸ்சி வழங்க வேண்​டும்.

இவ்​வாறு கடிதம் எழு​திய பிறகும் பரிந்​துரைகளை வழங்​காமல் பிர​காஷ் சிங் வழக்​கின் தீர்ப்பை மதிக்​காத மாநிலங்​களுக்கு எதிராக யுபிஎஸ்சி நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடரலாம். தாமதம் செய்​து, தவறிழைக்​கும் அதி​காரி​களை பொறுப்​பாக்கி நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்​றும் நீதிபதிகள் தெரி​வித்​தனர்.

யுபிஎஸ்சி-க்கு பட்டியல் அனுப்பாமல் பொறுப்பு டிஜிபி நியமிக்கும் கலாச்சாரம்: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
தேமுதிக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு விநியோகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in