பசுக்களை பாதுகாக்கும் படை: அவிமுக்தேஸ்வரானந்த் தகவல்

அவிமுக்தேஸ்வரானந்த்

அவிமுக்தேஸ்வரானந்த்

Updated on
1 min read

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலம் ஜோஷிமடத்தில் உள்ள ஜோதிஷ் பீடத்தின் சங்கராச் சாரியாராக (தலைவர்) அவிமுக்தேஸ்வரானந்த் உள்ளார்.

இப்போது உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் இருக்கும் அவர் கூறியதாவது: அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மவுனி அமாவாசை அன்று பிரயாக்ராஜ் நகரில் ‘சதுரங்கினி சேனை' என்ற பெயரில் ஒரு படை தொடங்கப்படும். பாரம்பரிய மற்றும் நவீன ஆயுதங்களைக் கொண்ட இந்தப் படை, பசுக்களையும் இந்துக்களையும் பாதுகாக்கும்.

இதில் அனைத்து இந்து சாதிகளையும் சேர்ந்த ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் அடங்கிய 2,18,000 வீரர்கள் இருப்பார்கள். இந்தப் படை மதம், கலாச்சாரம் மற்றும் சமூகத்தைப் பாதுகாக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>அவிமுக்தேஸ்வரானந்த்</p></div>
மும்முனைப் போட்டி: எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம் 2026? - ஒரு தெளிவுப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in