அரசு வழக்கறிஞர் ஆஜராகாததால் உச்ச நீதிமன்றம் அதிருப்தி

அரசு வழக்கறிஞர் ஆஜராகாததால் உச்ச நீதிமன்றம் அதிருப்தி
Updated on: 
1 min read

புதுடெல்லி: மது வாங்​கு​வோரின் வயதைச் சரி​பார்க்க நாடு முழுவதும் ஒரே மாதிரி​யான நடை​முறையை உரு​வாக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது விசா​ரணைக்கு வந்​த​போது, மத்​திய அரசு வழக்​கறிஞர் யாரும் ஆஜரா​காததை கண்ட நீதிப​தி​கள் மத்​திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்​பி​யும் இந்த விவ​காரத்தை மத்​திய அரசு தீவிரமாக எடுத்​துக் கொள்​ள​வில்​லை​யா என அதிருப்​தியை வெளிப்​படுத்​தினர்.

அடுத்த விசா​ரணை​யின் போது மத்​திய அரசின் சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா கண்​டிப்​பாக ஆஜராக வேண்​டும்​ என்​று அறி​வுறுத்​தினர்​.

அரசு வழக்கறிஞர் ஆஜராகாததால் உச்ச நீதிமன்றம் அதிருப்தி
“எல்லோரையும் அரவணைத்தால் அதிமுக புத்துயிர் பெறும்” - சி.வி.சண்முகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in