பாலியல் வழக்கில் தருண் தேஜ்பால் தண்டனையை நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

பாலியல் வழக்கில் தருண் தேஜ்பால் தண்டனையை நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
Updated on: 
1 min read

புதுடெல்லி: தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலின் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

தெஹல்கா பத்திரிகை நிறுவனத்தின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் கடந்த 2013-ம் ஆண்டில் தனக்கு கீழ் பணிபுரிந்த பெண்ணை இருமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கோவா மாநிலத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவருக்கு எதிரான வழக்கு விசாரணையில், போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி, வழக்கிலிருந்து தருண் தேஜ்பாலை 2021-ல் நீதிமன்றம் விடுவித்தது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் கடந்த ஆக. 6-ம் தேதி தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தருண் தேஜ்பால் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பிரசன்னா, பி.வராலே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. தருண் தேஜ்பாலின் மின்னஞ்சல்கள், சாட்சியங்கள் உள்ளிட்டவற்றை பரிசீலித்த நீதிபதிகள், தண்டனையை நிறுத்தி வைக்க கோரி தருண் தேஜ்பால் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

பாலியல் வழக்கில் தருண் தேஜ்பால் தண்டனையை நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
“நலத் திட்டங்களுக்கு ஆதாருக்கு பதிலாக வாக்காளர் அட்டை என்பது சதி திட்டம்!” - ராகுல் காந்தி

X