ஹமாஸ் போல ராக்கெட், டிரோன் மூலம் தாக்குதல் நடத்த சதி - உமர் வெளியிட்ட வீடியோ

ஹமாஸ் போல ராக்கெட், டிரோன் மூலம் தாக்குதல் நடத்த சதி - உமர் வெளியிட்ட வீடியோ
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி இஸ்​ரேலில் நடை​பெற்ற கொண்​டாட்​டத்​தின் போது ஹமாஸ் அமைப்​பினர் ட்ரோன், பாராசூட், ராக்​கெட்​டு​கள் மூலம் திடீர் தாக்​குதல் நடத்​தினர். அதை உடனடி​யாக சமாளிக்க இஸ்​ரேல் ராணுவ வீரர்​கள் திணறி​விட்​டனர்.

இந்நிலையில் ஹமாஸ் பாணியை பின்​பற்றி இந்​தி​யா​வில் தாக்​குதல் நடத்த மருத்​து​வர் உமர், அவரது நெருங்​கிய நண்​பர் தானிஷ் (எ) ஜசீர் முகமது பிலால் வானி​யும் சதி திட்​டம் தீட்​டி​யுள்​ளனர். ஆனால், கடைசி நேரத்​தில் திட்​டத்தை மாற்றி டெல்லியில் முதல் கார் வெடிகுண்டு தாக்​குதலை நடத்தி உள்​ளனர். உமரும் ஜசீரும் பல மாதங்​களாக சிறிய கை ராக்​கெட், ட்ரோன்​களில் குண்​டு​கள் வைத்து வெடிக்க செய்து சோதனை நடத்​தி​யுள்​ளனர். இந்த தொழில்​நுட்​பத்தை ஜசீர் தெரிந்து வைத்​துள்​ளார்.

காஷ்மீரின் அனந்​த​நாக் மாவட்​டம் காஜிகுண்ட் பகு​தி​யைச் சேர்ந்​தவர் ஜசீர். தந்​தை​யுடன் உலர் பழங்​கள் வியா​பாரம் செய்து வந்​துள்​ளார். இவரை காஷ்மீரில் கைது செய்த போலீ​ஸார், டெல்லி பட்​டி​யாலா நீதி​மன்​றத்​தில் நேற்று ஆஜர்​படுத்​தினர். அப்​போது ஐ20 காரை வாங்கி உமரிடம் கொடுத்த ஆமீர் ரஷீத் அலியை​யும் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தினர்.

இதற்​கிடை​யில் உயி​ரிழந்த உமர், ஹரி​யா​னா​வின் பரிதா​பாத்​தில் கைது செய்​யப்​பட்ட மருத்​து​வர் முஜம்​மில் ஆகியோர் கடந்த 2021-ம் ஆண்டு துருக்கி செனறு வந்​துள்​ளதும் கண்​டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது. அங்கு ட்ரோன், ராக்​கெட் தாக்​குதல் நடத்​து​வது எப்​படி என்​பது குறித்து ஜெய்ஷ் அமைப்​பினர் பயிற்சி அளித்​துள்​ளனர்.

இதற்​கிடை​யில், டெல்லி குண்​டு​வெடிப்​புக்கு முன்பு மருத்​து​வர் உமர் வீடியோ ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார். அதில், தீவிர​வாதத் தாக்​குதலுக்​காக இஸ்​லாத்​தில் ஒரு​வர் தற்​கொலை செய்து கொள்​வது தவறில்லை என வாதிட்​டுள்​ளார். ஜெய்ஷ் இ முகமது தீவிர​வாத அமைப்பை ஊக்​குவிக்​கும் வகை​யிலும் அப்​ப​தி​வில் சில குறிப்​பு​கள் உள்​ளன. இதுகுறித்​து தீவிர வி​சா​ரணை நடை​பெற்​று வரு​வ​தாக என்​ஐஏ அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in