‘ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் சீருடையில் ஊடுருவி கலவரத்தை ஏற்படுத்த சதி’ - கைதான தீவிரவாதி வாக்குமூலம்

அர்​பிதா சர்க்​கார் | ஹமீம் மண்​டல் |

அர்​பிதா சர்க்​கார் | ஹமீம் மண்​டல் |

Updated on
2 min read

கொல்கத்தா: டெல்லி ஜந்​தர் மந்​தர் போராட்​டத்​தில் போலீஸ் சீருடை​யில் ஊடுருவி மிகப்​பெரிய கலவரத்தை ஏற்​படுத்த சதித்திட்​டம் தீட்​டி​யிருந்​த​தாக ஜெய்ஷ்-இ முகமது தீவிர​வாதி ஹமீம் மண்​டல் வாக்​கு மூலம் அளித்​துள்​ளார்.

நீட் வினாத்​தாள் கசிவை கண்​டித்து கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்​பில் டெல்லி ஜந்​தர் மந்​தரில் நடத்திய போராட்டத்தில் வன்முறையும் நடந்தது. இதுகுறித்து டெல்லி போலீ​ஸார் கூறும்​போது, “சு​மார் 2,500-க்​கும் மேற்​பட்ட ரவுடிகள் பேரணி​யில் ஊடுரு​வினர். அவர்​களால்​தான் மிகப்​பெரிய வன்​முறை வெடித்​தது” என்றனர்.

இந்த சூழலில் மேற்​கு​வங்க மாநிலம், புர்பா பர்​த​மான் பகு​தி​யில் பாகிஸ்​தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிர​வாத அமைப்பின் ஹமீம் மண்​டலை மாநில சிறப்பு அதிரடிப் படை போலீ​ஸார் கைது செய்துள்​ளனர். அவருக்கு உடந்​தை​யாக செயல்​பட்ட தோழி அர்பிதா சர்க்​காரும் கைது செய்​யப்​பட்டு உள்​ளார்.

இதுகுறித்து மேற்​கு​வங்க சிறப்பு அதிரடிப்​படை ஐஜி கவுரவ் சர்மா கூறிய​தாவது: பாகிஸ்​தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிர​வாத அமைப்​புடன் இணைந்து ஹமீம் மண்​டல் செயல்​பட்டு உள்​ளார். பாகிஸ்​தானில் இருந்து அபீர் ஜாட், உமைர், ராணா, ஹமத் ஆகியோர் அவ்​வப்​போது உத்​தர​வு​களைப் பிறப்​பித்து உள்​ளனர். அந்த உத்​தர​வு​களின்​படி ஹமீம் செயல்​பட்டு வந்​துள்​ளார். பிரிட்டன் மற்​றும் மெக்​ஸிகோவை சேர்ந்த சிம் கார்​டு​கள் வாயிலாக பாகிஸ்​தான் தீவிர​வா​தி​களு​டன் ஹமீம் தொடர்​பில் இருந்துள்ளார்.

டெல்லி ஜந்​தர் மந்​தரில் போராட்​டம் நடை​பெற்​ற​போது பாகிஸ்தானில் இருந்து ஹமீ​முக்கு முக்​கிய உத்​தரவு பிறப்பிக்கப்பட்டு உள்​ளது. “உடனடி​யாக போலீஸ் சீருடைகளை வாங்​குங்​கள். போலீஸ் சீருடை​யில் டெல்லி ஜந்​தர் மந்​தர் போராட்டத்​தில் ஊடுருவி மிகப்​பெரிய வன்​முறையை ஏற்படுத்துங்​கள். இதற்​காக ஆண்​கள், பெண்​கள் என மிகப்​பெரிய குழுவை உரு​வாக்​குங்​கள்” என்று உத்​தர​விடப்​பட்டு உள்​ளது.

இந்த விவ​காரம் குறித்து தீவிர விசா​ரணை நடத்தி வரு​கிறோம். ஹமீமின் தீவிர​வாத பின்​னணி தெரிந்​தே, அவருக்கு உடந்தையாக அர்​பிதா சர்க்​கார் செயல்​பட்டு உள்​ளார். ஹமீமின் உத்​தர​வின்​படி மேற்​கு​வங்​கத்​தின் பிரபல அரசி​யல் தலைவர்களை அர்​பிதா வேவு பார்த்து உள்​ளார். குறிப்​பாக முதல்வர் சுவேந்து அதி​காரி குறித்த தகவல்​களை திரட்டியுள்​ளார்.

மேலும் மேற்கு வங்க அமைச்​சர் உமேஷ் ராயின் மகனை காதல் வலை​யில் வீழ்த்தி அவரை கடத்​த​வும் முயற்சி செய்து உள்​ளார். பாகிஸ்​தானில் உள்ள தீவிர​வா​தி​களு​டன் அர்​பி​தா​வும் தகவல் பரி​மாற்​றத்​தில் ஈடு​பட்டு உள்​ளார். தற்​போது ஹமீம் மற்​றும் அர்பிதாவுடன் தொடர்​புடைய ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளை மிக தீவிர​மாக தேடி வரு​கிறோம். இவ்​வாறு ஐஜி கவுரவ் சர்மா தெரி​வித்​துள்​ளார்.

மேற்​கு​வங்க போலீ​ஸார் கூறும்​போது, “தலைநகர் கொல்கத்தா அருகே ஹவு​ரா​வில் ஹமீம் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். அந்த வீட்​டில் பிரிண்​டிங், பார்​கோடு பணி​கள் நடை​பெற்று உள்​ளன. கடந்த 10 மாதங்​களாக சுமார் 8 பேர் ஷிப்டு அடிப்​படை​யில் பணி​யாற்றி உள்​ளனர். இந்த நிறு​வனத்​தில் என்ன வகை​யான பிரிண்​டிங் மற்​றும் பார்​கோடு பணி​கள் நடைபெற்றன என்​பது குறித்​து தீவிர வி​சா​ரணை நடத்​தப்​பட்​டு வரு​கிறது” என்​று தெரிவித்​தனர்​.

<div class="paragraphs"><p><em>அர்​பிதா சர்க்​கார் | ஹமீம் மண்​டல் |</em></p></div>
ஜென்ஸீ ட்ரெண்டில் ராகுல் காந்தி - ‘ஃபிங்கர் ஹார்ட்’ பகிர்ந்‌து நண்பர்கள் தின வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in