‘மகா நிக்கோபார்’ ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிட பசுமைத் தீர்ப்பாயத்துக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

‘மகா நிக்கோபார்’ ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிட பசுமைத் தீர்ப்பாயத்துக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
Updated on
1 min read

புதுடெல்லி: மகா நிக்கோபார் தீவு திட்​டத்​தின் சுற்​றுச்​சூழல் அனும​தி​களை மறுஆய்வு செய்​வதற்​காக அமைக்​கப்​பட்ட உயர்மட்​டக் குழு​வின் அறிக்​கையை தேசிய பசுமைத் தீர்ப்​பா​யம் (என்​ஜிடி) உடனடி​யாக வெளி​யிட வேண்​டும் என்று காங்கிரஸ் மூத்த தலை​வர் ஜெய்​ராம் ரமேஷ் வலி​யுறுத்​தியுள்​ளார்.

காங்​கிரஸ் மூத்த தலை​வர் ஜெய்​ராம் ரமேஷ் எக்ஸ் சமூக வலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: மக்களவை​யில், தீர்ப்​பா​யங்​கள் சீர்​திருத்த மசோ​தா, 2026 விவாதத்​துக்கு வரவுள்​ளது. தேசிய பசுமைத் தீர்ப்​பா​யம் உட்பட நாட்​டில் உள்ள 16 பகு​தி-நீ​தி​மன்ற அமைப்​பு​களின் எதிர்​காலத்தை தீர்​மானிக்​கும் முக்​கிய மசோ​தா​வாக இது இருக்​கும்.

கடந்த 2021-ம் ஆண்​டின் தீர்ப்​பா​யங்​கள் சீர்​திருத்​தச் சட்​டத்​தின் முக்​கியப் பிரிவு​களை உச்ச நீதி​மன்​றம் ரத்து செய்​தது. தீர்ப்பாயங்​களின் தலை​வர் மற்​றும் உறுப்​பினர்​களை நியமிக்க சுதந்​திர​மான தேசிய தீர்ப்​பா​யங்​கள் ஆணை​யம் அமைக்​கப்பட வேண்​டும் என்ற உச்ச நீதி​மன்​றத் தீர்ப்பை அமல்​படுத்​தும் வகையில் புதிய மசோ​தாவைக் கொண்​டுவர வேண்​டிய கட்டாயத்​துக்கு மத்​திய அரசு தற்​போது தள்​ளப்​பட்​டுள்​ளது.

மோடி அரசு தனது தவறான கொள்​கைகளை நியாயப்​படுத்த முயன்று தோற்​று, தற்​போது உச்ச நீதி​மன்ற உத்​தர​வுக்​குப் பணிந்து இந்​தச் சீர்​திருத்​தங்​களைக் கொண்டு வரு​கிறது. தன்னாட்சி அதி​காரம் பறிக்​கப்​பட்ட பசுமைத் தீர்ப்​பா​யம், புதிய சட்​டத்​தின் மூலம் மீண்​டும் தனது சட்​டப்​பூர்வ அதி​காரத்தை மீட்டெடுக்​கும் என்று நம்​பு​கிறோம்.

அதன் முதற்​கட்​ட​மாக, மகா நிக்​கோ​பார் தீவு திட்​டத்​தின் சுற்​றுச்​சூழல் அனு​மதி குறித்து ஆய்வு செய்ய அமைக்​கப்​பட்ட உயர்​மட்டக் குழு, கடந்த 2025 ஜூலை 8-ம் தேதி சீல் வைக்​கப்​பட்ட உறை​யில் பசுமைத் தீர்ப்​பா​யத்​திடம் சமர்ப்​பித்த அறிக்​கையை உடனடி​யாகப் பொது​வெளி​யில் வெளி​யிட வேண்​டும். இவ்​வாறு அவர்​ கூறியுள்​ளார்​.

‘மகா நிக்கோபார்’ ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிட பசுமைத் தீர்ப்பாயத்துக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் சைபர் மோசடிக்கு உதவிய 837 பேர் கைது: 48 மணி நேரம் சிறப்பு அதிரடி நடவடிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in