எம்.பி.க்களை அவதூறாகப் பேசினார் பிரதமர் மோடி: சபாநாயகரிடம் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கிய காங்கிரஸ்

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

Updated on
1 min read

புதுடெல்லி: ‘‘​நாட்டு மக்​களுக்கு உரை​யாற்​றிய போது எம்​.பி.க்​களை பிரதமர் மோடி அவதூறாகப் பேசி​யுள்​ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என்று காங்​கிரஸ் சார்​பில் மக்​களவை சபா​நாயகரிடம் உரிமை மீறல் நோட்​டீஸ் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாகக் காங்​கிரஸ் பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா​வுக்கு எழு​திய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: ஏப்​ரல் 17-ம் தேதி மக்​களவை​யில் அரசி​யலமைப்பு (131-வது திருத்​தம்) மசோ​தா, 2026 தோற்​கடிக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து ஏப்​ரல் 18-ம் தேதி பிரதமர் மோடி தொலைக்​காட்​சி​யில் நாட்டு மக்​களுக்கு உரை​யாற்​றி​னார். அந்த 29 நிமிட உரை​யில், மசோ​தா​வைத் தடுத்​த​தாகக் கூறி எதிர்க்​கட்சி எம்​.பி.க்​களைப் பிரதமர் விமர்​சித்​தார்.

மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட ஒரு பிர​தி​நி​தி, தனது கடமை​யைச் செய்​வதைக் கேள்விக்கு உட்​படுத்​து​வது தனிப்​பட்ட தாக்​குதல் மட்​டுமல்ல, அது நாடாளு​மன்​றத்​தின் அதி​காரம் மற்​றும் நாட்டு மக்​களின் ஜனநாயக உரிமை​கள் மீதான நேரடி அவம​திப்​பாகும். எனவே, இந்த விஷ​யத்தை மிகுந்த தீவிரத்​துடன் அணுக வேண்​டும். எனவே, எம்​.பி.க்​கள் மீது அவதூறு சுமத்​தி​யதற்​காக, பிரதமர் மோடி மீது மக்​களவை விதி 222-ன் கீழ் உரிமை மீறல் நோட்​டீஸ் வழங்​கு​கிறேன்.

நாடாளு​மன்​றத்​தின் புனிதம் மற்​றும் அதன் உறுப்​பினர்​களுக்கு வழங்​கப்​பட்​டுள்ள அரசி​யலமைப்பு பாது​காப்​பு​களை நிலைநிறுத்த, சபா​நாயகர் ஆகிய நீங்​கள் இந்த விவ​காரத்​தில் உடனடி மற்​றும் தீர்க்​க​மான நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும். இது​போன்ற விதி​மீறல்​கள் புறக்​கணிக்​கப்​படவோ அல்​லது மீண்​டும் நிகழவோ கூடாது. இவ்​வாறு கே.சி.வேணுகோபால் கூறி​யுள்​ளார்.

ஜெய்​ராம் ரமேஷ் கருத்து: இதுகுறித்து காங்​கிரஸ் எம்​.பி. ஜெய்​ராம் ரமேஷ் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “பிரதமருக்கு எதி​ராக உரிமை மீறல் நோட்​டீஸ் வழங்​கப்பட்டுள்ளது.பதவி​யில் இருக்​கும் பிரதமரின் நாட்டு மக்​களுக்​கான உரை எப்​போதும் தேசியஒற்​றுமை மற்​றும் நம்​பிக்​கையை வளர்ப்​ப​தற்​கான ஒரு மேடை​யாகவே இருந்து வந்​துள்​ளது.

ஆனால், இந்த உரை​யின்​போது பிரதமரின் வெட்​கமற்ற கட்சி சார்பு பேச்சு — காங்​கிரஸ் கட்​சி​யின் மீது 59 முறை நடத்​தப்​பட்ட தாக்​குதல்​கள் — பிரதம​ராக அவரது வரலாற்​றில் மற்​றொரு நிரந்​தர கறை​யாக இருக்​கும்​” என்​று கூறி​யுள்​ளார்​.

<div class="paragraphs"><p>பிரதமர் மோடி </p></div>
அமைதி ஒப்பந்தம் செய்யாவிட்டால் ஈரான் முழுவதும் குண்டு மழை பொழியும்: ட்ரம்ப் எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in