‘ஞானேஷ் குமாரை யாராலும் காப்பாற்ற முடியாது’ - ஜெயராம் ரமேஷ் திட்டவட்டம்

ஜெய்ராம் ரமேஷ்

ஜெய்ராம் ரமேஷ்

Updated on: 
1 min read

புதுடெல்லி: வாக்காளர் பட்டியல்களை எளிதில் தேடக்கூடிய வடிவத்தில் அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு, வாக்குத் திருடர்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களே காரணம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. ஆனால், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், எஸ்ஐஆர் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஜெயராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக, வாக்காளர் பட்டியல்களை எளிதில் தேடக்கூடிய வடிவத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர்.

மத்தியப் பிரதேசத்தில் லட்சக்கணக்கான போலி வாக்காளர்களை காங்கிரஸ் கண்டறிந்தபோது, 2018-ல் தேடக்கூடிய வாக்காளர் பட்டியல்களை வழங்குவதை இந்தியத் தேர்தல் ஆணையம் நிறுத்தியது. வாக்குத் திருடர்களுக்கு வழிவகுப்பதற்காக இந்தக் கோரிக்கை 8 ஆண்டுகளாக மறுக்கப்பட்டது.

17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மீண்டும் தொடங்கப்பட்ட சிறப்புச் சுருக்கத் திருத்தத்திற்காக (SSR), அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல்கள் தேடக்கூடிய வடிவத்தில் வழங்கப்படும் என்று அக்டோபர் 15 அன்று தேர்தல் ஆணையம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. வாக்குத் திருடர்களுக்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் வீதிகளில் இறங்கியிருப்பதே இதற்குக் காரணம்.

ஒவ்வொரு முறையும் 'வாக்குத் திருடர்கள்' பிடிபடும்போது, மோடி அரசு, தேடக்கூடிய வாக்காளர் பட்டியல்களை நிறுத்துவது, போலி வாக்காளர் சேர்க்கைகள், எஸ்ஐஆர் போன்ற ஒரு புதிய தந்திரத்தைக் கையாள்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் அறிவுறுத்தல்களின்படி செயல்பட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை தகர்த்தெறிந்த தலைமைத் தேர்தல் ஆணையரை யாராலும் காப்பாற்ற முடியாது. அவர் கட்டாயம் பதவி விலக வேண்டும்.

ஆனால் அது மட்டும் போதாது. இந்தியத் தேர்தல் ஆணையமும் அதன் தகவல் தொழில்நுட்ப அமைப்பும் முழுமையாகப் புதுப்பிக்கப்பட வேண்டும். 13 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் வாக்குரிமையை ஆபத்தில் ஆழ்த்தியுள்ள எஸ்ஐஆர் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>ஜெய்ராம் ரமேஷ்</p></div>
சென்னையின் 22 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேக்கமின்றி சீரான போக்குவரத்து: தமிழக அரசு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in