வெனிசுலா விவகாரம்: பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்

இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால்

இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால்

Updated on
1 min read

கராகஸ்: "வெனிசுலா மக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு இந்தியா தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இப்பகுதியின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட அனைவரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்க்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் அதிரடியாகக் கைது செய்த அமெரிக்கா, இருவரையும் நியூயார்க்குக்கு கொண்டு சென்றுள்ளது. மேலும், வெனிசுலாவை அமெரிக்காவே தற்காலிகமாக ஆட்சி செய்யும் என்றும், அதன் பரந்த எண்ணெய் வளங்கள் மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்ய பயன்படுத்தப்படும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

சர்வதேச அரசியலில் மிகப் பெரிய பரபரப்பை இது ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெனிசுலாவின் சமீபத்திய நிகழ்வுகள் ஆழ்ந்த கவலைக்கு உரியவை. இது தொடர்பான நிகழ்வுகளை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

வெனிசுலா மக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு இந்தியா தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இப்பகுதியின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட அனைவரும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்க்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

வெனிசுலாவில் உள்ள இந்தியர்களுடன் தலைநகர் கராகஸில் உள்ள இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளது. மேலும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் அவர்களுக்கு அது தொடர்ந்து வழங்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு இந்தியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வெனிசுலாவில் உள்ள அனைத்து இந்தியர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தங்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இந்திய தூதரகத்தின் cons.caracas@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது அவசர தொலைபேசி எண் +58-412-9584288 (வாட்ஸ்அப் அழைப்புகளுக்கும் பொருந்தும்) மூலம் காரகாஸில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால்</p></div>
வெனிசுலா | இடைக்கால அதிபராக பொறுப்பேற்க துணை அதிபருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in