“என்னை எதிர்த்தவர்களே ஜனநாயகத்தின் சக்தியை கற்றுக் கொடுத்தார்கள்” - ‘விக்சித் பாரத் சங்கல்ப் சபா’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

அரசுப் பணியில் 25 ஆண்டுகள் நிறைவு
“என்னை எதிர்த்தவர்களே ஜனநாயகத்தின் சக்தியை கற்றுக் கொடுத்தார்கள்” - ‘விக்சித் பாரத் சங்கல்ப் சபா’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை
Updated on: 
1 min read

புதுடெல்லி: அரசு தலைமைப் பொறுப்பில் 25 ஆண்​டு​கள் நிறைவு செய்​ததையொட்டி நடை​பெற்ற ‘விக்சித் பாரத் சங்கல்ப் சபா’ நிகழ்ச்​சி​யில் பேசிய பிரதமர் மோடி ‘என்னை எதிர்த்​தவர்​களே ஜனநாயகத்​தின் சக்​தியை எனக்​குக் கற்​றுக்​கொடுத்​தார்​கள்’ என தெரி​வித்​தார்.

நரேந்​திர மோடி கடந்த 2001-ம் ஆண்டு அக்​டோபர் 7-ம் தேதி முதன்​முறை​யாக குஜ​ராத் முதல்​வ​ராக பதவி​யேற்​றார். தொடர்ந்து, 13 ஆண்​டு​கள் குஜ​ராத் முதல்​வ​ராக பணி​யாற்​றிய அவர், 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி நாட்​டின் பிரதம​ராக பதவி​யேற்​றார். நேற்றுடன் அவர் அரசு தலைமைப் பொறுப்பில் 25 ஆண்​டு​களை நிறைவு செய்​தார். இதையொட்டி டெல்​லி​யில் நடை​பெற்ற ‘விக்​சித் பாரத் சங்​கல்ப் சபா’ நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி கலந்​து​கொண்​டார். அவர் விழா மேடைக்கு வந்​த​போது, மக்​கள் அவர் மீது மலர்​களை தூவி​யும், ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று முழக்கமிட்​டும் வரவேற்​றனர்.

இந்​நிகழ்ச்​சி​யில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: இன்​று, நான் அரசாங்​கத் தலை​வ​ராகத் தொடர்ந்து பணி​யாற்றி 25 ஆண்டுகளை நிறைவு செய்​துள்​ளேன். இது மக்​களின் ஆசி. நாட்டு மக்​களுக்கு நான் தலை​வணங்​கு​கிறேன். 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, நான் குஜ​ராத் முதல்​வ​ராகப் பதவி​யேற்​ற​போது, இந்த மைல்​கல் எட்​டப்​படும் என்று நான் கற்​பனை கூட செய்து பார்க்கவில்​லை. எனது நாட்​டுக்​காக இன்​னும் அதிக ஆற்றலுடன் பணி​யாற்​று​வதற்​கான வலிமை​யை​யும் திறனை​யும் எல்லாம்வல்ல இறைவன் எனக்கு வழங்க வேண்​டும் என்​பதே எனது பிரார்த்​தனை​.

கோடிக்​கணக்​கான நாட்டு மக்​களின் நம்​பிக்​கை​யும், லட்​சக்​கணக்​கான கட்​சித் தொண்​டர்​களின் அயராத உழைப்​புமே எனது மிகப்​பெரிய பலமாக இருந்​துள்​ளன. எனக்​குத் துணை​யாக நின்றவர்​கள் நம்​பிக்​கை​யின் வலிமை​யைக் காட்​டி​னார்​கள். என்னை எதிர்த்​தவர்​களே ஜனநாயகத்​தின் சக்​தியை எனக்​குக் கற்றுக்​கொடுத்​தார்​கள்.

2047-க்​குள் விக்​ஸித் பாரத்

2047-க்​குள் விக்​ஸித் பாரத், ஆத்​மநிர்​பர் பாரத், உலகளா​விய உற்பத்தி மையம், ஒலிம்​பிக் போட்​டிகளை நடத்​துதல், விண்​வெளியில் காலடி எடுத்து வைத்​தல் இவற்​றையெல்​லாம் நாம் சாதிப்​போம். நான் எனது தனிப்​பட்ட லட்​சி​யத்​துக்​காக வாழாமல், நமது தேசத்​துக்​காக வாழ்ந்​தவன். ஒரு​போதும் தனிமையை உணர்ந்​த​தில்​லை. இந்​தி​யா​வின் பண்​பாட்டு ஆன்​மா​வின் பாது​காவலர்​களாக எண்​ணற்ற தேசி​யத் தொண்​டர்​கள் உள்​ளனர்.

நம் நாடு சந்​தித்த பெரும் துயரங்​களில் ஒன்​று, அரசி​யலுக்​காக, வாக்​கு​களின் அடிப்​படை​யில் சமூகம் பிரிக்​கப்​பட்​டது​தான். பிரச்சினை அனை​வருக்​கும் பொது​வான​தாக இருந்​தால், அதற்கான தீர்​வும் அனை​வருக்​கும் பொது​வான​தாக இருக்க வேண்​டும். தகு​தி​யான எவரும் விடு​ப​டா​மல் இருப்​பது, யாருக்​கும் அவர்​களின் உரிமை​யான பலன்​கள் மறுக்​கப்​ப​டா​மல் இருப்​பது தான்​ முழுமையான ஆட்சி. அது​தான்​ மாற்​றத்​தின்​ உண்​மை​யான கதை. இவ்​வாறு நரேந்​திர மோடி பேசி​னார்​.

“என்னை எதிர்த்தவர்களே ஜனநாயகத்தின் சக்தியை கற்றுக் கொடுத்தார்கள்” - ‘விக்சித் பாரத் சங்கல்ப் சபா’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை
ராகுல் உட்பட எம்.பி.க்கள் மீண்டும் கைதாகி விடுதலை: ஞானேஷ்குமாருக்கு எதிராக வலுக்கிறது போராட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in