‘முதல்வர் பகவந்த் மான் பஞ்சாபை அழித்துவிட்டார்’ - பாஜகவில் இணைந்த 3 ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் குற்றச்சாட்டு

‘முதல்வர் பகவந்த் மான் பஞ்சாபை அழித்துவிட்டார்’ - பாஜகவில் இணைந்த 3 ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் குற்றச்சாட்டு
Updated on: 
1 min read

பஞ்சாப்: பஞ்​சாபில் இடைநீக்​கம் செய்​யப்​பட்ட மூன்று ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் நேற்று டெல்​லி​யில் பாஜக​வில் இணைந்தனர். 2027 சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு முன்பு ஆளும் கட்​சிக்கு இது புதிய பின்​னடை​வாக அமைந்​துள்​ளது.

பஞ்​சாப் சட்​டப்​பேர​வைக்கு அடுத்த ஆண்டு தேர்​தல் நடைபெறவுள்​ளது. அங்கு இப்​போது பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடை​பெறுகிறது. இந்நிலையில், அமிர்​தசரஸ் வடக்கு தொகுதி எம்​எல்​ஏ​வும் முன்​னாள் ஐபிஎஸ் அதி​காரி​யு​மான குன்​வர் விஜய் பிர​தாப் சிங், சமனா தொகு​தி​யின் சேதன் சிங் ஜவு​ரா​மாஜ்​ரா, சனூர் தொகுதியின் ஹர்​மீத் சிங் பதான்​மாஜ்ரா ஆகியோர் டெல்​லி​ பாஜக தலை​மையகத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் அக்​கட்​சி​யில் இணைந்​தனர். கட்சி விரோத செயல்​பாடு​களில் ஈடுபட்ட​தாக இவர்​கள் மூவரும் ஏற்​கெனவே ஆம் ஆத் மியிலிருந்து இடைநீக்​கம் செய்​யப்​பட்​டிருந்​தனர்.

குன்​வர் விஜய் பிர​தாப் சிங் நேற்று காலை எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​தார். மற்ற இரு​வரும் ஞாயிற்​றுக்​கிழமையே கட்சியி​லிருந்து வில​கி​யிருந்​தனர். பாஜக​வில் இணைந்த பிறகு குன்​வர் விஜய் பிர​தாப் சிங் பேசும்​போது, “முதல்​வர் பகவந்த் மான் பஞ்​சாபை அழித்​து​விட்​டார். மாநிலத்​தில் ஆம் ஆத்மி கட்சி முடிந்து​விட்​டது. அர்​விந்த் கேஜ்ரி​வாலும் பகவந்த் மானும் சேர்ந்து அக்​கட்​சியை முடிவுக்​குக் கொண்டு வந்​து​விட்​டனர். பஞ்​சாபிலும் இரட்டை இன்​ஜின் அரசு (பாஜக அரசு) அமை​யும்” என்​றார்.

முன்​ன​தாக, “போதைப்​பொருள், மிரட்​டிப் பணம் பறித்​தல், ரவுடிசம், ஊழலில் சிக்​கி​யுள்ள பஞ்​சாபை மீட்​டெடுக்க வேண்​டும்” என்று எக்ஸ் தளத்​தில் பதி​விட்​டிருந்​தார். அவரைத் தொடர்ந்து ஹர்​மீத் சிங் பதான்​மாஜ்ரா பேசும்​போது, “போதை​யில் மிதக்​கும் பஞ்​சாப் என்ற நிலை​யி​லிருந்து உயரும் பஞ்​சாப் ஆக மாற்​றவே பாஜக​வில்​ இணைந்​துள்​ளோம்​” என்​றார்​.

‘முதல்வர் பகவந்த் மான் பஞ்சாபை அழித்துவிட்டார்’ - பாஜகவில் இணைந்த 3 ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் குற்றச்சாட்டு
“கள்ள வாக்குகள் மூலம் தேர்தலை கைப்பற்ற விரும்புகிறது காங்கிரஸ்” - அமித் ஷா

X