கேரள தேர்தலில் மார்க்சிஸ்ட் - காங்கிரஸ் அணிகள் இடையே கடும் போட்டி: கருத்துக் கணிப்பில் தகவல்

கேரள தேர்தலில் மார்க்சிஸ்ட் - காங்கிரஸ் அணிகள் இடையே கடும் போட்டி: கருத்துக் கணிப்பில் தகவல்

என்டிஏ 2 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு
Published on

திருவனந்தபுரம்: கேரள சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இடது ஜனநாயக முன்​னணி - ஐக்​கிய ஜனநாயக முன்​னணிக்கு இடையே கடும் போட்டி இருக்​கும் என்று கருத்​துக்​கணிப்​பில் தெரிய​வந்​து உள்​ளது.

கேரள சட்​டப்​பேர​வை​யில் மொத்​தம் 140 இடங்​கள் உள்​ளன. இந்​நிலை​யில் கேரள சட்​டப் பேர​வைக்கு வரும் ஏப்​ரல் 9-ம் தேதி ஒரே கட்​ட​மாக வாக்​குப்​ப​திவு நடை​பெறவுள்​ளது. இந்​தத் தேர்​தலில் தற்​போது கேரளத்தை ஆட்சி செய்து வரும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது​சாரி ஜனநாயக முன்​னணிக்​கும்​(எல்​டிஎஃப்), காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணிக்​கும் (யுடிஎஃப்) இடையே கடும் போட்டி இருக்​கும் என்று கருத்​துக்​கணிப்​பில் தெரிய​வந்​துள்​ளது.

இதுதொடர்​பாக சிஎன்​என்​-நியூஸ்18 நடத்​திய வோட்​வைப் என்ற கருத்​துக்​கணிப்​பில் இத்​தகவல்​கள் வெளியே வந்​துள்​ளன.

எல்​டிஎஃப், யுடிஎஃப் ஆகிய இரு கூட்​ட​ணி​களும் சுமார் 36 சதவீத வாக்​கு​களைப் பெறும் என்​றும், பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி 14.9% வாக்​கு​களைப் பெறும் என்​றும் கருத்​துக்​கணிப்​பில் தெரிய​வந்​துள்​ளது.

கருத்​துக்​கணிப்​பின்​படி எல்​டிஎஃப் கூட்​டணி 68 முதல் 73 தொகு​தி​களி​லும், யுடிஎஃப் கூட்​டணி 64 முதல் 70 தொகு​தி​களி​லும் வெல்​லும் என்று தெரி​கிறது. அதே​நேரத்​தில் என்​டிஏ கூட்​டணி 2 தொகு​தி​களை மட்​டுமே கைப்​பற்​றும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

வோட்​வைப் என்ற பெயரில் நடத்​தப்​பட்ட இந்த கருத்​துக் கணிப்​பில் அடுத்த முதல்​வ​ராக யார் வரவேண்​டும் என்ற கேள்விக்கு முதல்​வர் பின​ராயி விஜயனே மீண்​டும் முதல்​வ​ராக வரவேண்​டும் என்று அதிக அளவில் மக்​கள் கருத்து தெரி​வித்​துள்​ளனர்.

அவருக்கு அடுத்​த​படி​யாக காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்​தவரும், பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான வி.டி.சதீஷன் முதல்​வ​ராக வரவேண்​டும் என்று கருத்து தெரி​வித்​துள்​ளனர். பின​ராயி விஜயன், வி.டி.சதீஷன் ஆகிய இரு​வருக்​குமே சுமார் 29 சதவீதம் பேர் ஆதர​வாக கருத்து தெரி​வித்​துள்​ளனர்.

அதற்​கடுத்த இடங்​களில் பாஜக தலை​வர் ராஜீவ் சந்​திரசேகர், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் தலை​வர் கே.கே.ஷைலஜா, காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் ஆகியோர் முறையே 10.8%, 9.3%, 8.4%வாக்​கு​களைப் பெற்​றுள்​ளனர்.

கடந்த 2021-ல் நடை​பெற்ற பேர​வைத் தேர்​தலில் எல்​டிஎஃப் கூட்​டணி 99 தொகு​தி​களில் வென்று ஆட்​சி​யைப் பிடித்​தது. காங்​கிரஸ் தலை​மையி​லான யு​டிஎஃப் கூட்​டணி 41 தொகு​தி​களைக் கைப்​பற்​றியது.

கேரள தேர்தலில் மார்க்சிஸ்ட் - காங்கிரஸ் அணிகள் இடையே கடும் போட்டி: கருத்துக் கணிப்பில் தகவல்
மும்முனைப் போட்டி: எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம் 2026? - ஒரு தெளிவுப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in