சிஜேபி ஒருங்கிணைப்பாளர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்காவின் காவல் நீட்டிப்பு

சிஜேபி ஒருங்கிணைப்பாளர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்காவின் காவல் நீட்டிப்பு
Updated on: 
1 min read

புதுடெல்லி: காக்ரோச் ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்களான சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோரின் நீதிமன்றக் காவலை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டித்து சிறப்பு நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் போராட்டங்களுக்கான இடப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட ஜந்தர் மந்தர் பகுதிக்குள் கடந்த அக்டோபர் 13 அன்று நுழைந்து போராட்டம் நடத்தியதாக சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா இருவரும் கைது செய்யப்பட்டனர். 

ஐந்து நாட்கள் காவல் முடிந்த நிலையில், டெல்லி காவல்துறையினரால் சிறப்பு நீதிமன்ற நடுவர் ரிது ராஜ் முன்னிலையில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். பண்டிகைக் கால பாதுகாப்பு மற்றும் இவர்களின் கடந்த கால நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு மேலும் ஐந்து நாட்கள் காவல் நீட்டிப்பு கோரப்பட்டது. இவர்களுக்கு சட்டத்தின் மீது மரியாதையில்லை என்றும், தடையை மீறித் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் இயல்புடையவர்கள் என்றும் தெரிவித்த சிறப்பு நீதிமன்ற நடுவர், காவலை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டித்தார்.

இருவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, ஒருவரின் ஆவணத்தில் இருந்த புகைப்படத்துக்கும் அடையாள அட்டைப் புகைப்படத்துக்கும் இடையே பொருத்தமின்மை இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், சவுரவ் தாஸின் தனது பெற்றோர் விவரங்கள் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களைத் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

சவுரவ் தாஸ், அசுதோஷ் நங்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிக் சிம்னி செய்தியாளர்களிடம் பேசுகையில், இருவரும் புதிதாக எந்தப் போராட்ட அழைப்பும் விடுக்காத நிலையில், புகைப்படப் பொருத்தமின்மையைக் காரணம் காட்டி ஜாமீன் மறுக்கப்பட்டது ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்தார். இதனிடையே, பண்டிகைக் காலத்தில் அவர்களைச் சிறையிலேயே வைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி ஆம் ஆத்மி தலைவர் சவுரப் பரத்வாஜ் விமர்சித்துள்ளார்.

இவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில் ஒன்று, அதன் தீவிரத் தன்மை காரணமாகக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிஜேபி ஒருங்கிணைப்பாளர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்காவின் காவல் நீட்டிப்பு
“குடியேற்றக் கொள்கைகளே காரணம்” - பிரான்ஸ் கலவரம் குறித்து ட்ரம்ப் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in