அமெரிக்​கா, பாகிஸ்தானிடம் இருந்து சிஜேபி-க்கு நிதி: ஆதாரம் இருப்பதாக மத்திய அமைச்​சர் ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு

அமெரிக்​கா, பாகிஸ்தானிடம் இருந்து சிஜேபி-க்கு நிதி: ஆதாரம் இருப்பதாக மத்திய அமைச்​சர் ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு
Updated on: 
1 min read

பெங்​களூரு: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலை​வர்​கள், அமெரிக்கா மற்​றும் பாகிஸ்​தானிடம் இருந்து நிதி​யுதவி பெற்று உள்​ளனர். இதற்கு வலு​வான ஆதா​ரங்​கள் உள்ளன என்று மத்​திய அமைச்​சர் ஜிதேந்திர சிங் குற்​றம் சாட்டி உள்​ளார்.

நீட் வினாத்​தாள் கசிவை கண்​டித்து டெல்​லி​யில் சிஜேபி சார்​பில் போராட்​டம் நடத்​தப்​பட்​டதன் விளைவாக, மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்​மேந்​திர பிர​தான் ராஜி​னாமா செய்​தார். இதைத் தொடர்ந்து எஸ்​ஐஆர் விவ​காரத்​தில் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்குமார் பதவி வில​கக் கோரி சிஜேபி சார்​பில் கடந்த அக்​டோபர் 10-ம் தேதி முதல் டெல்​லி​யில் தொடர் போராட்டங்​கள் நடத்​தப்​பட்​டன.

இதுதொடர்​பாக சிஜேபி நிறு​வனர் அபிஜித் திப்​கே, செய்​தித் தொடர்​பாளர் சவுரவ் தாஸ், ஒருங்​கிணைப்​பாளர் அசுதோஷ் ரங்கா மீது பல்​வேறு வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்டு உள்​ளன. சிறை​யில் அடைக்​கப்​பட்ட மூன்று பேரும் நிபந்​தனை ஜாமீனில் விடுவிக்​கப்​பட்டு உள்​ளனர். ஓராண்​டுக்கு சட்​ட​விரோத நடவடிக்​கை​களில் ஈடுபட மாட்​டோம் என்று மூவரும் உறு​தி​மொழி பத்​திரத்​தில் கையெழுத்​திட்டு உள்​ளனர்.

இந்த சூழலில் மத்​திய அமைச்​சர் ஜிதேந்​திர சிங் பெங்​களூரு​வில் நேற்று நிருபர்​களிடம் கூறிய​தாவது: இந்​தி​யா​வுக்கு எதி​ராக செயல்​படும் தன்​னார்வ தொண்டு நிறு​வனங்​கள் சிஜேபி தலைவர்களுக்கு நிதி​யுதவி செய்​துள்​ளன. இதற்​கான வலு​வான ஆதா​ரங்​கள் கிடைத்து உள்​ளன.

அமெரிக்​காவைச் சேர்ந்த அமைப்​பு​களிடம் இருந்து சிஜேபி தலை​வர் அபிஜித் திப்கே நிதியுதவி​களை பெற்று உள்​ளார்.

அதன் ஒருங்​கிணைப்​பாளர் அசுதோஷ் ரங்கா பாகிஸ்​தான் அரசியல் தலை​வர்​களிடம் இருந்து பணம் பெற்று உள்​ளார். இவ்வாறு அவர் குற்​றம் சாட்டி உள்​ளார். இந்த விவ​காரம் தொடர்பாக அபிஜித் திப்​கே, சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்​​கா ஆகியோரிடம்​ தீவிர வி​சா​ரணை நடத்​தப்​படும்​ என்​று டெல்​லி குற்றப்​பிரிவு போலீஸ்​ வட்​​டாரங்​கள்​ தெரிவித்​துள்​ளன.

அமெரிக்​கா, பாகிஸ்தானிடம் இருந்து சிஜேபி-க்கு நிதி: ஆதாரம் இருப்பதாக மத்திய அமைச்​சர் ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு
ட்ரம்ப் தேர்தல் வீழ்ச்சி: இந்தியாவுக்கு சாதகங்களும், சவால்களும் என்னென்ன? - ஒரு பார்வை

X