

புதுடெல்லி: கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் மகளிருக்கு இடஒதுக்கீடு கோரி காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீஸ் அதிகாரியைத் தாக்கியதாக போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய மகளிர் காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு டெல்லியிலுள்ள கூடுதல் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
நேற்று இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டபோது, அல்கா லம்பா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்ய மாஜிஸ்திரேட் அஸ்வனி பன்வார் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அல்கா லம்பா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.