நீட் தேர்வு வினாத்தாள் மோசடியில் 14 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு

நீட் தேர்வு வினாத்தாள் மோசடியில் 14 பேர் மீது  குற்றச்சாட்டு பதிவு
Updated on: 
1 min read

புதுடெல்லி: நாடு முழுவதும் நடை​பெற்ற நீட் தேர்வு வினாத் தாள் மோசடி​யில் தொடர்​புடைய 14 பேர் மீது டெல்லி சிறப்பு நீதிமன்றம் குற்​றச்​சாட்டு பதிவு செய்​துள்​ளது.

நடப்​பாண்டு நடை​பெற்ற நீட் தேர்​வின்​போது வினாத்​தாள் கசிந்த விவகாரம் நாடு முழு​வதும் பெரும் சர்ச்​சையை ஏற்​படுத்​திய நிலை​யில், தேர்​வு​களை நடத்​தும் தேசிய தேர்வு முகமை, தேர்வை முழு​மையாக ரத்து செய்​து​விட்டு மறுதேர்வை நடத்​தி​யது. இந்த விவகாரத்​தில், அப்​போதைய மத்​திய கல்வி அமைச்​சர் பத​வியை ராஜினாமா செய்த நிலை​யில், வினாத்​தாள் கசிவு வழக்கு சிபிஐவசம் ஒப்​படைக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு வழக்​கில், நீட் வினாத்தாளை சட்​ட​விரோத​மாகப் பெற்று, இடைத்​தரகர்​கள் மற்றும் பயிற்சி மையங்​களுக்கு பணத்​துக்​காக விநியோகித்ததாக சிபிஐ குற்​றம் சாட்​டியுள்​ளது. இது​தொடர்​பாக, சுமார் 20 ஆயிரம் பக்​கங்​கள் கொண்ட குற்​றப் பத்​தி​ரி​கையை சிறப்பு நீதி​மன்​றத்​தில் சிபிஐ தாக்​கல் செய்துள்ளது.

இதனை பரிசீலித்த டெல்லி சிறப்பு நீதி​மன்ற நீதிபதி அஜய் குப்தா, வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்ட 14 பேர் மீதும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து உத்​தர​விட்​டார். மேலும், குற்றம்​சாட்​டப்​பட்ட அனைவரை​யும் வரும் 21-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்​படுத்த உத்​தர​விட்​டதோடு, வரும் 25-ம் தேதி முதல் வழக்​கின் விசாரணை தினந்​தோறும் நடத்​தப்​படும் என்​றும் அறி​வித்​தார்.

நீட் தேர்வு வினாத்தாள் மோசடியில் 14 பேர் மீது  குற்றச்சாட்டு பதிவு
மேகேதாட்டு அணை திட்டத்துக்கு அனுமதி வழங்க கூடாது: மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தல்

X