

புதுடெல்லி: காலியாக உள்ள 40 உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்களுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் சதவீ தத்தை குறைத்து தமிழகத்திடம் ஒப்படைப்பது குறித்த முடிவை இன்று தெரிவிப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டீ, “காலியாக உள்ள 40 இடங்களை மீண்டும் ஒப்படைப்பது தொடர்பான விவரங்களை நாளைய தினம் (இன்று) தாக்கல் செய்யப்படும்” என தெரிவித்தார். இதையடுத்து வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.