2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அமைச்சர் நித்​யானந்த் ராய் தகவல்

2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அமைச்சர் நித்​யானந்த் ராய் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: 2026 ஏப்​ரல் முதல் செப்​டம்​பர் வரை வீடு​கள் கணக்​கெடுப்​பும், 2027 மார்ச் மாதம் முதல் மக்​கள்​தொகை கணக்​கெடுப்​பும் நடை​பெறும் என்று மத்​திய உள்​துறை இணை அமைச்​சர் நித்​யானந்த் ராய் மக்​களவை​யில் தெரி​வித்​தார்.

மக்​களவை​யில் நேற்று கேள்வி நேரத்​தின்​போது மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி எழுப்​பிய கேள்விக்கு மத்​திய அமைச்​சர் நித்​யானந்த் ராய் அளித்த பதில்:

மக்​கள் தொகை கணக்​கெடுப்​புப் பணியை மத்​திய உள்​துறை அமைச்​சகம் நடத்​தவுள்​ளது. இது இரண்டு கட்​டங்​களாக நடை​பெறும். முதலா​வ​தாக வீடு​கள் கணக்​கெடுப்​பும், 2-வ​தாக மக்​கள் தொகை கணக்​கெடுப்​பும் நடை​பெறும்.

2026 ஏப்​ரல் முதல் செப்​டம்​பர் வரையி​லான கால​கட்​டத்​தில் மாநில மற்​றும் யூனியன் பிரதேசங்​களின் வசதிக்கு ஏற்ப 30 நாட்​களுக்​குள் வீடு​கள் கணக்​கெடுப்பு நடத்​தப்​படும். இது முதல் கட்ட கணக்​கெடுப்பு ஆகும். இரண்​டாம் கட்​ட​மாக 2027 மார்ச் 1-ம் தேதி முதல் மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடை​பெறும்.

லடாக் யூனியன் பிரதேசத்​தின் மட்​டும் 2027-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடை​பெறும். அப்​போது அங்கு பனிப்​பொழிவு காலம் என்​ப​தால் அங்கு கணக்​கெடுப்பு பணி நடை​பெறாது. 2027ல் மக்​கள் தொகை கணக்​கெடுப்​பின் போது சாதி கணக்​கெடுப்​பும் நடத்​தப்​படும்.

மக்​கள்​தொகை கணக்​கெடுப்பு நடத்த வசதி​யாக கடந்த நவம்​பர் 30-ம் தேதி வரை சோதனை முறை​யில் கணக்​கெடுப்பு சில மாநிலங்​கள், யூனியன் பிரதேசங்​களில் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட நகரங்​களில் நடை​பெற்​றது. இதுதொடர்​பாக வினாத்​தாள் விரை​வில் வெளி​யிடப்​படும். இதில் எழுந்​துள்ள சந்​தேகங்​கள் தொடர்​பான

வி​னாக்​கள், இந்த வி​னாத்​தாளில் இடம்​பெறும். இவ்​வாறு மத்​திய அமைச்​சர் நித்​யானந்த்​ ராய்​ தெரி​வித்​தார்​.

2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு: மத்திய அமைச்சர் நித்​யானந்த் ராய் தகவல்
வலுவிழந்து வருகிறது டிட்வா புயல்: நீலகிரி உட்பட 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in