“நட்பு தினத்தை போல் கைத்தறி நாளையும் கொண்டாடுங்கள்” - பிரதமர் மோடி வேண்டுகோள்

“நட்பு தினத்தை போல் கைத்தறி நாளையும் கொண்டாடுங்கள்” -  பிரதமர் மோடி வேண்டுகோள்
Updated on
1 min read

புதுடெல்லி: இளைஞர்​கள் ‘நட்பு தினத்​தை’க் கொண்​டாடியது போல, நாட்​டின் பாரம்​பரி​யத்​தை​யும், நெச​வாளர்​களின் வாழ்வாதா​ரத்​தை​யும் போற்​றும் வகை​யில் ‘கைத்தறி தினத்தையும்’ அதே உற்​சாகத்​துடன் கொண்​டாட வேண்​டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.

ஆங்​கிலேயர் ஆட்​சிக்கு எதி​ரான 1905-ம் ஆண்​டின் சுதேசி இயக்கத்தை நினை​வு கூரும் வகை​யிலும், ‘தற்​சார்பு இந்​தி​யா’ கனவை நனவாக்​கும் நோக்​கிலும் ஆகஸ்ட் 7-ம் தேதி ‘தேசிய கைத்தறி தினம்’ கடைப்​பிடிக்​கப்​படு​கிறது.

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு இன்​ஸ்​டாகி​ராம் வீடியோவைப் பகிர்ந்த பிரதமர் நரேந்​திர மோடி, இளைஞர்​கள் ‘நட்பு தினத்​தை’க் கொண்டாடியது போல, நெச​வாளர்​களின் வாழ்​வா​தா​ரத்​தைப் போற்​றும் வகையில் கைத்​தறி நாளை​யும் உற்​சாக​மாகக் கொண்டாட வேண்​டும் என வேண்டு​கோள் விடுத்​தார்.

செழு​மை​யான பாரம்​பரி​யம்

தொடர்ந்து நேற்று ‘எக்​ஸ்’ தளத்​தில் வாழ்த்​துப் பதி​விட்ட பிரதமர் நரேந்திர மோடி, “தேசிய கைத்​தறி தின​மான இன்​று, இந்தியாவின் செழு​மை​யான பாரம்​பரி​யத்​தை​யும், அதைப் பாதுகாத்து வரும் நெச​வாளர்​கள் மற்​றும் கைவினைஞர்​களின் திறமை​யையும் அர்ப்​பணிப்​பை​யும் போற்றி வணங்​கு​கிறோம்” எனக் குறிப்​பிட்​டுள்​ளார்.

“நட்பு தினத்தை போல் கைத்தறி நாளையும் கொண்டாடுங்கள்” -  பிரதமர் மோடி வேண்டுகோள்
“எதற்கும் கவலைப்பட வேண்டாம்” - பாஜகவுக்கு ஆதரவளிக்கும் வேற்று கட்சி எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in