சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை வழக்கு: டிஐஜி தலைமையில் எஸ்ஐடி அமைத்தது சிபிஐ

சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை வழக்கு: டிஐஜி தலைமையில் எஸ்ஐடி அமைத்தது சிபிஐ
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்​வர் சுவேந்து அதி​காரி​யின் நேர்முக உதவி​யாளர் சந்​திர​நாத் ராத் கொலை வழக்கு சிபிஐ வசம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது.

மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல் முறை​யாக ஆட்​சி​யைப் பிடித்​தது. 9-ம் தேதி சுவேந்து அதி​காரி முதல்​வ​ராக பொறுப்பேற்றார். முன்​ன​தாக, சுவேந்து அதி​காரி​யின் உதவியாளர் சந்​திர​நாத் ராத் மே 6-ம் தேதி இரவு மர்ம நபர்​களால் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். இது தொடர்​பாக போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

தொழில்​நுட்​பக் கண்​காணிப்பு மற்​றும் டிஜிட்​டல் தடயங்​களின் அடிப்​படை​யில், கொலை​யாளி​கள் வெளி​ மாநிலத்​தைச் சேர்ந்தவர்​கள் என்​பது தெரிய​வந்​தது. அதன் அடிப்​படை​யில் உத்தர பிரதேசம், பிஹாருக்கு சென்ற போலீ​ஸார் குற்றவாளிகளை தேடி வந்​தனர். இந்​நிலை​யில் 3 கூலிப்​படை​யினர் உத்தர பிரதேசத்​தில் நேற்று முன்​தினம் கைது செய்யப்பட்டனர்.

மேற்கு வங்க காவல் துறை​யின் சிறப்​புப் படை​யின​ரால் கைது செய்​யப்​பட்ட அவர்​கள், வடக்கு 24 பர்​கானா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்​படுத்​தப்​பட்டு 13 நாட்​கள் போலீஸ் காவலில் வைக்​கப்​பட்​டுள்​ளனர். இதையடுத்​து, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற மேற்கு வங்க காவல் துறை பரிந்​துரை செய்​திருந்​தது.

இதன் அடிப்​படை​யில், இந்த வழக்​கின் பொறுப்​பு​களை மாநில காவல் துறை​யிட​மிருந்து சிபிஐ அதி​காரி​கள் முறைப்​படி நேற்று பெற்​றுக் கொண்டு முதல் தகவல் அறிக்​கையை பதிவு செய்​தனர். இதையடுத்து இந்த வழக்கை விசா​ரிக்க டிஐஜி தலை​மை​யில் 7 உறுப்​பினர்​களைக் கொண்ட சிறப்பு புல​னாய்​வுக்​ குழு அமைக்கப்​பட்​டுள்​ளது.

சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை வழக்கு: டிஐஜி தலைமையில் எஸ்ஐடி அமைத்தது சிபிஐ
நீட் தேர்வு ரத்தும் தாக்கமும்: பரிதவிக்கும் மாணவர்களுக்கு தீர்வுதான் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in