காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 7.35 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 7.35 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: ​கா​விரி​யில் தமிழகத்​துக்கு டிசம்​பரில் வழங்க வேண்​டிய 7.35 டிஎம்சி நீரை திறக்க கர்​நாடகா​வுக்கு காவிரி மேலாண்மை ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

காவிரி மேலாண்மை ஆணை​யத்​தின் 46-வது கூட்​டம் அதன் தலை​வர் எஸ்​.கே.ஹல்​தர் தலை​மை​யில் நேற்று டெல்​லி​யில் நடை​பெற்​றது. அதில் தமிழக அரசின் சார்​பில் நீர்​வளத்​துறை செய​லா​ளர் ஜெய​காந்​தன், காவிரி நீர் தொழில்​நுட்ப குழு தலை​வர் சுப்பிரமணி​யன் உள்​ளிட்​டோர் காணொலி வாயி​லாக பங்கேற்றனர். கர்​நாட​கா, கேரளா, புதுச்​சேரி ஆகிய மாநிலங்களின் நீர்​வளத்​துறை அதி​காரி​களும் அதில் பங்கேற்றனர்.

தமிழக நீர்​வளத்​துறை செய​லா​ளர் ஜெய​காந்​தன் பேசுகை​யில், ‘‘தற்​போது மேட்​டூர் அணை​யின் நீர்​ இருப்பு 87.554 டிஎம்சி ஆக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4282 கன அடி நீர் வந்​து கொண்டிருக்​கும் நிலை​யில், 2986 கன அடி நீர் பாசனத்​துக்​காக திறந்​து​விடப்​படுகிறது.

காவிரி நீர் பங்​கீட்டு வழக்​கில் உச்சநீதிமன்​றம் பிறப்​பித்த உத்​தர​வின்​படி டிசம்​பரில் கர்​நாடகா தமிழகத்​துக்கு 7.35 டிஎம்சி நீரை திறந்​து​விட வேண்​டும். அந்த நீரை பிலிகுண்​டுலு சோதனை நிலை​யத்​தில் டிசம்​பர் மாத இறு​திக்​குள் கர்​நாடக அரசு உறு​திப்​படுத்த வேண்​டும்​''என வலி​யுறுத்​தி​னார்.

இதற்கு கர்​நாடக நீர்​வளத்​துறை அதி​காரி​கள், "தற்​போது காவிரி ஆற்​றின் குறுக்​கே​யுள்ள கிருஷ்ண ​ராஜ​சாகர், கபினி உள்​ளிட்ட அணை​களில் நீர்​வரத்து அதி​க​மாக உள்​ளது.

எனவே நிகழாண்​டில் உச்​ச நீ​தி​மன்ற உத்​தரவை காட்​டிலும் கூடு​தலாகவே தமிழகத்துக்கு நீர் திறக்​கப்​பட்​டுள்​ளது. அதாவது நவம்​பர் இறு​தி வரை 158 டிஎம்சி நீர் திறந்து விட்​டிருக்க வேண்​டிய நிலை​யில், கர்நாடக அரசு தமிழகத்​துக்கு 315.76 டிஎம்சி நீரை திறந்துவிட்டுள்ளது" என்​றனர்.

இதனை ஏற்ற ஆணைய தலை​வர் எஸ்​.கே.ஹல்​தர், "டிசம்​பரில் தமிழகத்​துக்கு திறக்க வேண்​டிய 7.35 டிஎம்சி நீரை திறந்​து​விட வேண்​டும்​"என உத்​தர​விட்​டார்​.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 7.35 டிஎம்சி நீரை திறக்க கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் உத்தரவு
“சட்டப்படி எதிர்கொள்வேன்!” - ஊழல் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் கே.என்.நேரு எதிர்வினை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in