

புதுடெல்லி: தெற்கு டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் வசிப்பவர் நிஷீத் கோலி. இவர் மத்திய அரசின் மூத்த செயலர்கள், விஞ்ஞானிகள், பாதுகாப்புத் துறை நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், அமெரிக்க கப்பற்படை போன்றவற்றுக்கு ஏராளமான இ-மெயில்களை அனுப்பியுள்ளார்.
அதில், ‘‘பிரதமர் அலுவலகம், முதன்மை செயலர் பி.கே.மிஸ்ராவுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்திய ராணுவத்துக்கு தேவையான ஜெட் இன்ஜின்களை தயாரிக்க உதவி செய்ய விரும்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். தான் ஒரு ஜவுளித் துறை ரசாயன பொறியாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக இஸ்ரோ, எச்ஏஎல் போன்ற நிறுவனங்களையும் நிஷீத் கோலி தொடர்பு கொண்டுள்ளார். இதுபோல் பிரதமர் மோடி, முதன்மை செயலரின் பெயர்களை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக பிரதமர் அலுவலகம் அளித்த புகாரின்படி சிபிஐ அதிகாரிகள் அவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.