

புதுடெல்லி: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் இந்தியாவை விமர்சிப்பது போன்ற போலி வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்ததாக, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களையும், ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதையும் விமர்சிப்பது போல இருந்தது.
இதைப் பகிர்ந்த பிரசாந்த் பூஷண், "இந்தியாவுக்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் கொடுத்த சம்மட்டி அடி. ஜெய்சங்கர் ரஷ்யாவுக்கு என்ன மாதிரியான அறிவுரை சொன்னார்?" என்று பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ உண்மையானது அல்ல என்று இந்தியாவில் உள்ள ரஷ்யத் தூதரகம் முதலில் மறுத்தது. அதன் பிறகு வெளியுறவு அமைச்சகம் சரிபார்த்து, அந்த வீடியோ போலி என்று உறுதிப்படுத்தியது.