பிஹார், ம.பி, குஜராத்தில் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு

பிஹாரின் பங்கிபூர் தொகுதியில் வாக்களித்த வாக்காளர்

பிஹாரின் பங்கிபூர் தொகுதியில் வாக்களித்த வாக்காளர்

Updated on
1 min read

புது டெல்லி: பிஹாரின் பங்கிபூர், மத்திய பிரதேசத்தின் டட்டியா மற்றும் குஜராத்தின் மஞ்சல்பூர் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறும்.

தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, காலை 11 மணி வரையிலான நிலவரப்படி, டட்டியாவில் (மத்தியப் பிரதேசம்) 32.53 சதவீதமும், மஞ்சல்பூரில் (குஜராத்) 14.27 சதவீதமும், பங்கிபூரில் (பிஹாரில்) 11.50 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி வாக்குப்பதிவு நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் ஜூலை 28-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

பங்கிபூர்: பிஹாரில் உள்ள பங்கிபூரில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இத்தொகுதியில் பாஜகவின் நீரஜ் குமார் சின்ஹா, ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் மற்றும் ஆர்ஜேடி வேட்பாளர் ரேகா குப்தா ஆகியோர் களத்தில் உள்ளனர்.

டட்டியா: மத்தியப் பிரதேசத்தின் டட்டியா தொகுதியில், பாஜகவின் அசுதோஷ் திவாரிக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குன்வர் கன்ஷ்யாம் சிங்கிற்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

மஞ்சல்பூர்: குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் உள்ள மஞ்சல்பூர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான பிகாபாய் ரபாரிக்கு எதிராக பாஜக சார்பில் சதீஷ் படேல் போட்டியிடுகிறார்.

<div class="paragraphs"><p>பிஹாரின் பங்கிபூர் தொகுதியில் வாக்களித்த வாக்காளர்</p></div>
அமித் ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் அமளி - பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in