

உயிரிழந்த இன்ஸ்பெக்டர் ஆசிஷ் சர்மா
போபால்: மத்திய பிரதேசம் - சத்தீஸ்கர் - மகாராஷ்டிர எல்லையில் ம.பி. நக்சல் ஒழிப்புப் படையினர் நேற்று அதிகாலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் இன்ஸ்பெக்டர் ஆசிஷ் சர்மா (40) பரிதாபமாக உயிரிழந்தார்.
ம.பி.யின் நக்சல் ஒழிப்புப் படையில் பருந்துப் படை என்ற பிரிவு உள்ளது. இதில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் வீரதீர செயலுக்கான விருது பெற்றவர்கள். அந்தப் படையில் பணியாற்றியவர்தான் இன்ஸ்பெக்டர் ஆசிஷ் சர்மா.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘ம.பி., சத்தீஸ்கர், மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் சந்திக்கும் எல்லையில் அடர்ந்த வனப்பகுதியில் இந்த என்கவுன்ட்டர் நடைபெற்றது. நக்சல்கள் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் எத்தனை பேர் இறந்தனர் என்பது முடிவில்தான் தெரிய வரும்’’ என்றனர்.