ம.பி. அரசு மருத்துவமனையில் இருமல் மருந்தை கண்ணில் விட்டதில் சிறுவனுக்கு பார்வை இழப்பு

ம.பி. அரசு மருத்துவமனையில் இருமல் மருந்தை கண்ணில் விட்டதில் சிறுவனுக்கு பார்வை இழப்பு
Updated on
1 min read

போபால்: மத்திய பிரதேச மாநிலம், பூசா கமல்​பூர் கிராமத்தை சேர்ந்​த இந்​திர​ராஜ், தனது 19 மாத ஆண் குழந்​தைக்கு லேசான சளி, இரு​மலுடன் கண்​கள் சிவந்ததால் குழந்​தையை பண்​டா​வில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்​ளார்.

அங்கு குழந்தை நல மருத்​து​வர் ஹிமான்ஷு வர்மா குழந்​தையை பரிசோ​தித்து விட்​டு, கண்சொட்டு மருந்​து, பாராசிட்​ட​மால் மற்​றும் பிற மருந்​துகளை பரிந்​துரைத்​துள்​ளார். ஆனால் ஊழியர்​கள் தவறு​தலாக, கண் சொட்டு மருந்​துக்கு பதிலாக, இருமல் மருந்தை குழந்​தை​யின் கண்​களில் விட்​ட​தாக கூறப்​படு​கிறது.

இதையடுத்து குழந்​தை​யின் நிலைமை மோசமடைந்​த​தால் போபால் எய்ம்ஸ் மருத்​து​வ​மனைக்​கு கொண்டு சென்​றனர். அங்கு குழந்தை தனது கண் பார்​வையை நிரந்​தர​மாக இழந்​து​விட்​ட​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர். இதுகுறித்து பண்டா காவல் நிலை​யத்​தில் குழந்​தை​யின் தந்தை புகார் அளித்​துள்​ளார்.

ம.பி. அரசு மருத்துவமனையில் இருமல் மருந்தை கண்ணில் விட்டதில் சிறுவனுக்கு பார்வை இழப்பு
ஆட்சி பறிபோனதும் கட்சிகள் பல உடைவதும், சில உறுதியாக இருப்பதும் எப்படி? - ஓர் அலசல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in