தெஹல்கா நிறுவனருக்கு 10 ஆண்டு சிறை: பாலியல் வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தெஹல்கா நிறுவனருக்கு 10 ஆண்டு சிறை: பாலியல் வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

பனாஜி: பாலியல் வன்​கொடுமை வழக்​கில் தெஹல்கா நிறு​வனர் தருண் தேஜ்​பாலுக்கு 10 ஆண்டு கடுங்​காவல் சிறை தண்​டனை விதித்​து, மும்பை உயர் நீதி​மன்ற கோவா கிளை நேற்று தீர்ப்பு வழங்​கியது.

நாட்​டின் பிரபல​மான புல​னாய்வு இதழ்​களில் ஒன்று தெஹல்​கா. கடந்த 2013-ம் ஆண்டு நவம்​பரில், தெஹல்​கா​வின் வரு​டாந்​திர ‘திங்க்​பெஸ்ட்’ நிகழ்ச்சி கோவா​வில் நடை​பெற்​றது. அப்​போது, அதன் நிறு​வனரும் ஆசிரியரு​மான தருண் தேஜ்​பால் (62) விடு​தி​யின் மின்​தூக்​கி​யில் தன்னை பாலியல் வன்​கொடுமை செய்​தார் என அந்​நிறுவன பெண் ஊழியர் ஒரு​வர் புகார் அளித்​திருந்​தார். இதையடுத்து கைது செய்​யப்​பட்ட தேஜ்​பால் பின்​னர் ஜாமினில் விடுவிக்​கப்​பட்​டார்.

இது தொடர்​பான வழக்கை விசா​ரித்த கோவா விசா​ரணை நீதி​மன்​றம், 2021-ல் தருண் தேஜ்​பால் மீதான குற்​றச்​சாட்​டுக்கு ஆதாரம் இல்லை எனக் கூறி அவரை விடு​வித்​தது. இந்​தத் தீர்ப்பை எதிர்த்து கோவா அரசு மும்பை உயர் நீதி​மன்​றத்​தின் கோவா கிளை​யில் மேல்​முறை​யீடு செய்​தது. நீதிப​தி​கள் டாக்​டர் நீலா கோகலே மற்​றும் அமித் ஜம்​சந்​தேகர் அடங்​கிய அமர்வு இந்த வழக்கை விசா​ரித்​தது. விசா​ரணை முடிந்த நிலை​யில் நேற்று தீர்ப்பு வழங்​கப்​பட்​டது.

நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில், “இந்​திய தண்​டனைச் சட்​டம் (ஐபிசி) பிரிவு 376(2)(f), 376(2)(k) மற்​றும் 354A, 354B ஆகிய​வற்​றின் கீழ் தருண் தேஜ்​பால் மீதான பாலியல் வன்​கொடுமை குற்​றச்​சாட்டு நிரூபண​மாகி உள்​ளது. எனவே, அவரை விடு​தலை செய்து பிறப்​பித்த கீழ் நீதி​மன்​றத் தீர்ப்பை ரத்து செய்​கிறோம். மேலும் தேஜ்​பால் இந்த வழக்​கில் குற்​ற​வாளி என அறிவிக்​கிறோம்” என்றனர்.

முன்​ன​தாக தீர்ப்பு வாசிக்​கப்​பட்​ட​போது தேஜ்​பால் நீதி​மன்​றத்​தில் ஆஜராகி​யிருந்​தார். அப்போது, தனக்கு இப்​போது 62 வயதாகிறது என்​றும் மனை​வி, 2 பிள்​ளை​கள் இருப்​ப​தால் கருணை காட்​டும்​படி அவர் வேண்​டு​கோள் விடுத்​தார். இது​போல அவருக்கு குறைந்​த​பட்ச தண்​டனை விதிக்க வேண்​டும் என அவரது வழக்​கறிஞர் கேட்​டுக் கொண்​டார்.

இதையடுத்து நேற்று பிற்​பகலில் தண்​டனை விவரம் அறிவிக்​கப்​பட்​டது. அப்​போது, தருண் தேஜ்​பாலுக்கு 10 ஆண்​டு​கள் கடுங்​காவல் சிறை தண்​டனை வி​திக்​கப்​படு​வ​தாக​வும் 2 வாரத்​துக்​குள் அவர் சரணடைய வேண்​டும்​ என்​றும்​ நீதிப​தி​கள்​ உத்​தரவிட்​டனர்​.

தெஹல்கா நிறுவனருக்கு 10 ஆண்டு சிறை: பாலியல் வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
விவசாயிகளின் எதிர்பார்ப்பு முதல்வர் விஜய்க்கு தெரியவில்லை: விவசாய சங்கப் பிரதிநிதிகள் அதிருப்தி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in