எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொழுகை நடத்துவது என்பது மத உரிமை கிடையாது: மும்பை ஐகோர்ட் அனுமதி மறுப்பு

எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொழுகை நடத்துவது என்பது மத உரிமை கிடையாது: மும்பை ஐகோர்ட் அனுமதி மறுப்பு
Updated on
1 min read

மும்பை: மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் டாக்ஸி ரிக்சா ஓலா-உபேர் ஆண்​கள் டிரைவர் யூனியன் சார்​பில் ஒரு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. அதில், "தற்​போது ரம்​ஜான் மாதம் நடை​பெற்று வரு​கிறது. இதனால், விமான ​நிலைய வளாகத்​தில் உள்ள காலி இடத்​தில் ​தொழுகை நடத்​து​வதற்கு அனு​ம​திக்க வேண்​டும்" என்று கோரப்பட்டது.

இந்த மனு நேற்று மும்பை உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் பி.பி.கொலபா​வாலா, பிர்​தோஷ் பூனி​வாலா ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு விசா​ரணைக்கு வந்​தது. மனுவை விசா​ரித்த நீதிபதிகள் கூறிய​தாவது: ரம்​ஜான் விரதம் என்​பது இஸ்​லாம் மதத்தின் ஒருங்​கிணைந்த பகு​தி. எனினும், எந்த இடத்​தில் வேண்டு​மா​னாலும் தொழுகை நடத்​து​வதற்கு அனு​மதி தர முடியாது. எந்த இடத்​தில் வேண்​டு​மா​னாலும் தொழுகை நடத்துவது என்​பது மத உரிமை கிடை​யாது. குறிப்​பாக விமான​நிலை​யம் எதிரே உள்ள பகு​தி​யில் தொழுகை நடத்த அனு​ம​திக்க முடி​யாது.

பாது​காப்பு விஷ​யங்​களை கவனத்​தில் கொள்ள வேண்டி இருப்பதால் அந்த இடத்​தில் தொழுகை நடத்த உத்​தர​விட முடியாது. விமான நிலை​யப் பாது​காப்​பின் அம்​சத்தை நாங்​கள் கவனத்​தில் கொள்ள வேண்​டும். தொழுகை நடத்த விமான நிலையத்​துக்கு அரு​கில் ஒரு கட்​டிடத்தை வாங்​கு​வது என்ற கேள்விக்கே இடமில்லை. மதம் அல்​லது வேறு எந்த விஷயமோ பாது​காப்​பு​ தான் முதலில் வரு​கிறது. பாது​காப்​பைப் பொறுத்தவரை, நாங்​கள் எந்த சமரச​மும் செய்​து கொள்​ள முடி​யாது. இவ்வாறு நீதிப​தி​கள்​ தெரிவித்​தனர்​.

எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொழுகை நடத்துவது என்பது மத உரிமை கிடையாது: மும்பை ஐகோர்ட் அனுமதி மறுப்பு
ஈரான் போர் விளைவுகள்... சீனாவுக்கு இழப்பா, ஆதாயமா? - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in