

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்திலுள்ள மொத்தம் 10 மாநகராட்சிகளில் 9-ல் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஒட்டு மொத்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 204 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் சாதனை படைத்துள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெறும் 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா பல இடங்களில் நடத்திய ரோடு ஷோ, தேர்தலுக்கு முன் பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதிகளுக்குப் பலமுறை சென்று மக்களைச் சந்தித்தது உள்ளிட்டவை காரணமாக பாஜக மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வனவாசி கல்யாண பரிஷத்’ அமைப்பின் பணிகளும் வெற்றிக்கு உதவியுள்ளன.