ரூ.5,000 கோடி சொத்து உள்ள பாஜக எம்எல்ஏ யாசகராக மாறினார் - வறுமை அறியும் நோக்கம்

குருவின் அறிவுரையை ஏற்று...
ரூ.5,000 கோடி சொத்து உள்ள பாஜக எம்எல்ஏ யாசகராக மாறினார் - வறுமை அறியும் நோக்கம்
Updated on
1 min read

மும்பை: சு​மார் ரூ.5,000 கோடி சொத்​துகள் உடைய பாஜக எம்எல்ஏ பராக் ஷா யாசக​ராக மாறி மும்பை வீதி​களில் தர்​மம் கோரி​னார். இந்த வீடியோ, புகைப்​படங்​கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரு​கிறது.

மகா​ராஷ்டிர தலைநகர் மும்​பையைச் சேர்ந்​தவர் பராக் ஷா (57). ரியல் எஸ்​டேட் அதிப​ரான இவர் காட்​கோபர் கிழக்கு தொகுதி பாஜக எம்​எல்​ஏ-​வாக உள்​ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.5,000 கோடி​யாக மதிப்​பிடப்​படு​கிறது. சமண துறவி நம்​ர​முனி மகா​ராஜின் தீவிர சீட​ரான பராக் ஷா, அவரது அறி​வுரைப்​படி, சில நாட்​களுக்கு முன்பு யாசக​ராக மாறி மும்பை தெருக்​களில் தர்​மம் கோரி அலைந்​தார்.

கையில் ஒரு பழைய சாக்கு பை, ஒரு துடைப்​பத்தை தூக்​கிக் கொண்டு தெரு, தெரு​வாக சுற்​றி​னார். காட்​கோபர் ரயில் நிலையவாயி​லில் அமர்ந்து யாசகம் கேட்​டார்.

இந்த வீடியோ, புகைப்​படங்​கள் சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து எம்​எல்ஏ பராக் ஷா கூறும்​போது, “குரு​வின் அறி​வுரைப்​படி ஒரு​நாள் யாசக​ராக மாறினேன். காட்​கோபர் பகுதியில் சுற்​றித் திரிந்து தர்​மம் கேட்​டேன்.

எனது சொந்த வணிக வளாகத்​துக்கு சென்​றேன். ஆனால் எனது காவலா​ளியே என்னை வெளியே தள்​ளி​விட்​டார். எனது நெருங்கிய நண்​பரை தேடிச் சென்​றேன். அவரே என்னை வெளியே விரட்டியடித்​தார்.

யாசக​ராக வாழ்ந்த நாளில் சில விஷயங்​கள் தெளி​வாகப் புரிந்​தது. பணம், பதவிக்கு மட்​டுமே மக்கள் மதிப்பு அளிக்​கின்​றனர்.

தனி​நபர், ஏழைகளுக்கு எந்த மரி​யாதை​யும் இல்​லை. ஆனால் மும்பை​யில் மனி​தாபி​மானம் இன்​ன​மும் நீடித்​திருக்​கிறது. சில இளைஞர்​கள், இளம்​பெண்​கள் எனக்கு 20 ரூபாயை வழங்​கினர். ஒரு சமோசா வியா​பாரி எனக்கு இலவச​மாக சமோசா வழங்கினார். இந்த அனுபவத்​தை எனது வாழ்​நாளில்​ மறக்​க முடியாது” என்​றார்​.

ரூ.5,000 கோடி சொத்து உள்ள பாஜக எம்எல்ஏ யாசகராக மாறினார் - வறுமை அறியும் நோக்கம்
ஹேக் ஹசீனா கட்சியின் 7 தலைவர்களுக்கு மரண தண்டனை விதிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in