மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தாமரை சின்னத்தை மறைத்ததாக பாஜக குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தாமரை சின்னத்தை மறைத்ததாக பாஜக குற்றச்சாட்டு
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க இரண்​டாம் கட்ட தேர்​தலில் முறை​கேடு​கள் நடந்​த​தாக பாஜக குற்​றம் சாட்​டி​யுள்​ளது.

இதுகுறித்து எதிர்க்​கட்​சித் தலை​வரும், பவானிபூர், நந்​தி​கி​ராம் தொகு​தி​களின் பாஜக வேட்​பாள​ரு​மான சுவேந்து அதி​காரி நேற்று கூறுகை​யில், “டைமண்ட் ஹார்​பர் தொகு​தி​யின் கீழ் வரும் ஃபால்டா பகு​தி​யில் உள்ள பல வாக்​குச்​சாவடிகளில் மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் (இவிஎம்) எங்​கள் கட்சி சின்​னம் ‘டேப்’ ஒட்டி மறைக்​கப்​பட்டு இருந்​தது.

அப்​போது 35% வாக்​கு​கள் பதி​வாகி​யிருந்​தது. இந்த முறை​கேடு குறித்து மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, பூபேந்​திர யாதவ் உள்​ளிட்ட கட்​சி​யின் மூத்த தலை​வர்​களிடம் பேசினேன். தேர்​தல் ஆணை​யம் இந்​தக் குற்​றச்​சாட்டை கவனத்​தில் எடுத்​துக்​கொண்​டுள்​ளது” என்​றார்.

பாஜக​வின் தகவல் தொழில்​நுட்​பப் பிரிவுத் தலை​வர் அமித் மாள​வியா கூறுகை​யில், ‘‘பல வாக்​குச்​சாவடிகளில் டேப் பயன்​படுத்​தப்​பட்​டதன் மூலம் வாக்​காளர்​கள் பாஜக சின்​னத்​தைத் தேர்வு செய்​வ​திலிருந்து தடுக்​கப்​பட்​டனர். இந்த முறை​கேட்டை ‘டைமண்ட் ஹார்​பர் மாதிரி’ என்று அழைக்​கலாம். முறை​கேடு​கள் நடந்த இடங்​களில் உடனடி​யாக மறு​வாக்​குப்​ப​திவு நடத்​தப்பட வேண்​டும்” என்​றார்.

ஹரிந்​தங்கா உயர்​நிலைப் பள்​ளி​யின் ஒரு வாக்​குச்​சாவடி உட்பட குறிப்​பிட்ட சில வாக்​குச்​சாவடிகளை மாள​வியா சுட்​டிக்​காட்​டி​னார். மேலும், 189-வது வாக்​குச்​சாவடி போன்று வேறு பல வாக்​குச்​சாவடிகளி​லும் இது​போன்ற முறை​கேடு​கள் நடந்​திருப்​ப​தாக அவர் குற்​றம் சாட்​டி​னார்.

இதுகுறித்து மேற்கு வங்க தலை​மைத் தேர்​தல் அதி​காரி கூறுகை​யில், “இவிஎம்​.களில் செய்​யப்​படும் முறை​கேடு அல்​லது சேதா​ரம் குறித்த புகார்​கள் முழு​மை​யாக சரி​பார்க்​கப்​படும். வாக்​குப்​ப​திவு பொத்​தான் மீது டேப் ஒட்​டப்​பட்டு இருந்​த​தாகப் புகார்​கள் வந்​தால், அவை சரி​பார்க்​கப்​படும். பு​கார்​ உண்​மை​யாக இருந்​தால் அந்த வாக்​குச்​சாவடிகளில் மறு​வாக்​குப்​ப​திவு நடத்​தப்​படும்​” என்​றார்.

மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தாமரை சின்னத்தை மறைத்ததாக பாஜக குற்றச்சாட்டு
மேற்கு வங்க தேர்தலில் மத்திய படையினர் அத்துமீறல்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in