பிஷ்னோய் கும்பல் ரூ.7 கோடி கேட்டு அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல்

பிஷ்னோய் கும்பல் ரூ.7 கோடி கேட்டு அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல்
Updated on: 
1 min read

மொகாலி: டெல்லி ஆம் ஆத்மி கட்சித் தலை​வர் அர்விந்த் கேஜ்ரிவால் மற்​றும் அவரது மகளுக்கு கொலை மிரட்டல் மற்றும் ரூ.7 கோடி பணம் கேட்டு பிஷ்னோய் கும்​பல் பெயரில் மிரட்​டல் விடுக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, டெல்லி ஆம் ஆத்மி எம்​எல்ஏ ஜர்​னைல் சிங், மொகாலி மாவட்ட காவல் கண்​காணிப்​பாளரிடம் அளித்த புகாரில் கூறி​யிருப்​ப​தாவது: நவ. 6-ம் தேதி எனது செல்​போனுக்கு ஒரு நபரிட​மிருந்து தொலைபேசி அழைப்​பும், வாட்​ஸ்​அப் குறுஞ்செய்​தி​யும் வந்​தது. அந்த நபர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்​தவர் என தெரி​வித்​தார்.

அந்த நபர், அர்விந்த் கேஜ்ரி​வாலிடம் ரூ.7 கோடி கொடுக்​கச் சொல்லுங்​கள். இல்​லை​யெனில், அவரை​யும், அவரது மகள் ஹர்ஷிதா கேஜ்ரி​வாலை​யும் கொலை செய்து விடு​வ​தாக மிரட்​டல் விடுத்தார். தேர்ந்​தெடுக்​கப்​பட்ட மக்​கள் பிர​தி​நி​தி​யான எனது பதவியைத் தவறாகப் பயன்​படுத்​தி, கேஜ்ரி​வால் மற்​றும் அவரது குடும்​பத்​தினருக்கு எதி​ரான பணம் பறிக்​கும் முயற்​சி​யை​யும் கொலை மிரட்​டலை​யும் அந்த நபர் மேற்​கொண்​டுள்​ளார்.

இந்​தச் சம்​பவம் தொடர்​பாக விரி​வான விசா​ரணை நடத்த வேண்டும். அசம்​பா​விதம் ஏற்​படு​வதற்கு முன்பு அவரைக் கைது செய்ய வேண்​டும். மேலும், மிரட்​டலுக்கு உள்​ளான நபர்​களுக்​குப் போதிய பாது​காப்பு வழங்க வேண்​டும்.இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்​து, போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

பிஷ்னோய் கும்பல் ரூ.7 கோடி கேட்டு அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல்
திமுக, அதிமுக கட்சிகள் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது டிஜிபி.யிடம் புகார்

X