

நிதின் நபின்
புதுடெல்லி: பாஜக தேசியத் தலைவராக இருந்த ஜேபி நட்டா பதவிக்காலம் முடிந்த நிலையில் தற்போது புதிய செயல் தலைவரக நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பிஹார் மாநிலத்தில் அமைச்சராக இருக்கிறார். இவர் பாஜகவின் நாடாளுமன்ற குழு உறுப்பினராக உள்ளார். அண்மையில் நடந்துமுடிந்த பாஜக சட்டப்பேரவைத் தேர்தலில் இவரின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
யார் இந்த நிதின் நபின்? 45 வயதான நிதின் நபின், பாட்னாவில் பிறந்தவர். இவர் பாஜகவின் முதுபெரும் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான நபின் கிஷோர் பிரசாத் ஷின்ஹாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தந்தை மறைவுக்கு பிறகு அரசியலில் நிதின் நபின் நுழைந்தார்.
பனிகாபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு பிஹாரில் எம்எல்ஏ ஆனார். 2006-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 முறை எம்எல்ஏவாக இருக்கிறார்.
தற்போது பிஹாரில் நிதிஷ் தலைமையிலான கூட்டணி அரசில் சாலை போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கிறார் நிதின் நபின். பிஹாரில் பாஜக வெற்றிக்கு இவர் கடுமையான உழைப்பு செலுத்திய நிலையில் அவருக்கு பாஜக மேலிடம் மிகப்பெரிய பொறுப்பை அளித்துள்ளது.