அஜித் பவாரின் அஸ்தி பாராமதி​யில் கரைப்பு

அஜித் பவாரின் அஸ்தி பாராமதி​யில் கரைப்பு
Updated on
1 min read

பாராமதி: மறைந்த அஜித் பவாரின் அஸ்தி பாராம​தி​யில் உள்ள நீரா மற்​றும் கர்ஷா நதி​கள் சங்​கமிக்​கும் இடத்​தில் கரைக்​கப்​பட்​டது.

மகா​ராஷ்டிரா துணை முதல்​வ​ராக இருந்த அஜித் பவார், பாராம​தி​யில் நிகழ்ந்த விமான விபத்​தில் உயி​ரிழந்​தார். அவரது உடல் புனே மாவட்​டம் பாராம​தி​யில் உள்ள வித்ய பிர​திஸ்​தான் கல்​லூரி மைதானத்​தில் நேற்று முன்​தினம் தகனம் செய்​யப்​பட்​டது.

இங்கு அஜித் பவாரின் மகன்​கள் பர்த் மற்​றும் ஜே ஆகியோர் தங்​களது தந்​தை​யின் அஸ்​தியை நேற்று சேகரித்​தனர். பின்​னர் அதை பாராம​தி​யில் நீரா மற்​றும் கர்ஷா நதி​கள் சங்​கமிக்​கும் இடத்​தில் கரைத்தனர்.

மகா​ராஷ்டி​ரா​வின் ஆளும் மகா​யுதி கூட்​ட​ணி​யில் அஜித் பவாரின் தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்சி இடம் பெற்​றுள்​ளது. இந்​நிலை​யில் துணை முதல்​வ​ராக இருந்த இக்​கட்​சி​யின் தலை​வர் அஜித் பவார் விமான விபத்​தில் இறந்​ததால் இவரது மனைவி சுனேத்ரா பவாரை துணை முதல்வராக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. சுனேத்ரா மாநிலங்​களவை எம்​.பி.​யாக உள்​ளார்.

அஜித் பவாரின் அஸ்தி பாராமதி​யில் கரைப்பு
இந்தியாவின் அழியாத ஆன்மா மகாத்மா காந்தி: எதிர்க்கட்சி தலைவர் ராகுல் புகழாரம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in