குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்​படுத்த தடை குறித்து அரசு கொள்கை முடிவெடுக்க டெல்லி ஐகோர்ட் அறிவுறுத்தல்

குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்​படுத்த தடை குறித்து அரசு கொள்கை முடிவெடுக்க டெல்லி ஐகோர்ட் அறிவுறுத்தல்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் குழந்​தைகள் நல மருத்து​வர் சரத் குப்தா மற்​றும் கீர்த்தி துவா ஆகியோர் ஒரு பொதுநல மனு தாக்​கல் செய்​திருந்​தனர்.

சமூக வலை​தளங்​கள் பாலியல் ரீதி​யான வெளிப்​படை​யான பல உள்​ளடக்​கங்​களை வெளி​யிட்டு வரு​கின்​றன. எனவே 13 வயதுக்​குட்​பட்ட குழந்​தைகள் சமூக வலை​தளங்​களை பயன்​படுத்​த தடை விதிக்க வேண்​டும் என்று அந்த மனுவில் வலி​யுறுத்​தப்​பட்​டது.

இந்த மனு நீதிப​தி​கள் வி.​காமேஷ்வர் ராவ் மற்​றும் மன்​மீத் ப்ரித்தம் சிங் அரோரா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசாரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள், “சிறு​வர்​கள் சமூக ஊடகங்​களை பயன்படுத்த தடை​வி​திப்​பது என்​பது அரசின் கொள்கை சார்ந்த விஷ​யம் என்​ப​தால் நீதி​மன்​றம் தலை​யிட்டு உத்​தரவு பிறப்​பிக்​க முடி​யாது.

அதேநேரம் இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய முறை​யில் பரிசீலித்து தகுந்த கொள்கை முடிவை எடுக்​கலாம்​’' என அறிவுறுத்தினர்.

குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்​படுத்த தடை குறித்து அரசு கொள்கை முடிவெடுக்க டெல்லி ஐகோர்ட் அறிவுறுத்தல்
நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 40 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in