திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரம்: லஞ்சம் வாங்கிய அதிகாரியின் ஜாமீன் மனு நிராகரிப்பு

திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரம்: லஞ்சம் வாங்கிய அதிகாரியின் ஜாமீன் மனு நிராகரிப்பு
Updated on
1 min read

நெல்லூர்: ஆந்​தி​ரா​வில் ஜெகன்​மோகன் ரெட்​டி ஆட்சியின்போது திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லின் லட்டு பிர​சாதம் தயாரிக்க கலப்பட நெய் பயன்​படுத்​தப்​பட்​டதாக புகார் எழுந்தது. இது தொடர்​பாக உச்ச நீதி​மன்ற உத்​தர​வின் பேரில் சிறப்பு புல​னாய்​வுக் குழு விசா​ரித்து வரு​கிறது. அக்​குழு இது​வரை 14 பேரை கைது செய்​துள்​ளது.

இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்​ட​வரும் ஏ-34 குற்​ற​வாளி​யு​மான திருப்​பதி தேவஸ்​தான அதி​காரி விஜய​பாஸ்​கர் ரெட்டி அளித்த வாக்​குமூலத்​தில், “நான் நெய்யை பரிசோதனை செய்​த​போது அதில் கலப்​படம் இருப்​பதை அறிந்​தேன். இதுகுறித்து விநி​யோகம் செய்த நிறு​வனங்​களுக்கு எடுத்​துக் கூறினேன். ஆனால், அவர்​கள், எனக்கு தொடர்ந்து லஞ்​சம் கொடுத்து நெய்யை தொடர்ச்​சி​யாக விநி​யோகம் செய்து வந்​தனர்.

இதன் மூலம் திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​துக்கு ரூ.118 கோடி நஷ்டம் ஏற்​பட்​டது. 2023-ல் போலே பாபா நெய் நிறு​வனத்​தில் இருந்து ரூ.75 லட்​சம், பிரிமியர் நிறு​வனத்​தில் இருந்து ரூ.8 லட்​சம் லஞ்​சம் பெற்​றேன்” என தெரி​வித்​துள்​ளார்.

மேலும் இவர் ஜாமீன் கோரி மனு தாக்​கல் செய்​திருந்​தார். ஆனால், லஞ்​சம் வாங்​கியதை ஒப்​புக்​கொண்​ட​தால், இவரது ஜாமீன் மனுவை நெல்​லூர் லஞ்ச ஒழிப்பு நீதி​மன்​றம் நிராகரித்​தது.

திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரம்: லஞ்சம் வாங்கிய அதிகாரியின் ஜாமீன் மனு நிராகரிப்பு
இந்தியா ஓபன் பாட்மிண்டன்: ஜோனாதன் கிறிஸ்டி, அன் சே யங் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in