ஜெய்ப்பூரில் சிஜேபி நிர்வாகிகள் மீது தாக்குதல்

ஜெய்ப்பூரில் சிஜேபி நிர்வாகிகள் மீது தாக்குதல்
Updated on
1 min read

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரின் பக்ரூ சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராம்பூரா-கன்வர்புரா கிராமத்தில், மாட்டுத் தொழுவத்தில் இயங்கி வரும் அரசுத் தொடக்கப் பள்ளியைப் பார்வையிட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) இணை ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா தலைமையில் நிர்வாகிகள் சென்றனர்.

அப்போது அங்கு திரண்ட கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்து “அர்பன் நக்சல்கள், தேசதுரோகிகள் மற்றும் பாகிஸ்தானியர்கள்” எனக் கூச்சலிட்டுத் தாக்குதல் நடத்தியது. சிஜேபி நிர்வாகிகளின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

அசுதோஷ் ரங்காவின் சட்டை கிழிக்கப்பட்டதுடன், சிவாங்கி சர்மா என்ற பெண் நிர்வாகி உட்பட பலர் காயமடைந்து பள்ளிக்குள் செல்ல முடியாமல் திரும்பினர். உள்ளூர் பாஜக கவுன்சிலரே ஆட்களை அனுப்பி இந்த வன்முறையைத் தூண்டியதாகவும், இதற்காகப் பணம் விநியோகிக்கப்பட்டதாகவும் அசுதோஷ் ரங்கா குற்றம் சாட்டினார்.

ஜெய்ப்பூரில் சிஜேபி நிர்வாகிகள் மீது தாக்குதல்
வீட்டுப்பாடம் செய்யாததற்காக ஆசிரியை அடித்ததில் 6 வயது சிறுவன் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in